பாஜக.,வுக்கு புதிய உறுப்பனர்களை சேர்க்கும் பணியை கட்சி தீவிரப்படுத்தி உள்ளது, இதன் ஒரு பகுதியாக "மிஸ்டுகால்' மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது. உறுப்பினர்களது அனைத்து விவரங்களும் கட்சி இணைய தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றன.
பாஜக விதிகளின்படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது உறுப்பினர் பதிவை புதுப்பிக்கவேண்டும்.
கடந்த 1-1-2009-இல் உறுப்பினர்களாக இணைந்த வர்களின் பதிவு 31-12-2014-இல் முடிகிறது. எனவே, புதிய உறுப்பினர்சேர்க்கை, பதிவை புதுப்பிக்கும் பணி நவம்பர் 1 முதல் 3 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.
புதிய உறுப்பினர்சேர்க்கும் பணியை தில்லியில் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, தேசியத்தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
தகவல் தொழில் நுட்ப வசதியைப் பயன் படுத்தி உறுப்பினர் சேர்க்கை முழுவதையும் இணைய தளம் மூலம் கையாள பாஜக திட்டமிட்டுள்ளது. புதிதாக உறுப்பினர்களாக சேர விரும்பு பவர்களுக்கு வசதியாக "மிஸ்டு கால்' கொடுக்க 180026620202 என்ற எண்ணை பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது.
உறுப்பினராக சேர விரும்புபவர்கள் இந்த எண்ணுக்கு "மிஸ்டு கால்' கொடுத்தால் அடுத்த நொடியே அவர்களுக்கு ஒரு குறுஞ் செய்தி வரும். அதில் உள்ள எண்ணுக்கு முகவரி, தொலைபேசி எண்ணை அளித்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று ரூ.5 கட்டணத்தை பெற்றுக்கொண்டு உறுப்பினர் அட்டையை கட்சி நிர்வாகிகள் வழங்கு வார்கள். கட்டணமில்லா தொலைபேசி எண், குறுஞ் செய்தி, கட்சி இணைய தளம் ஆகியவற்றின் மூலமும் உறுப்பினர் சேர்க்கை நடந்துவருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை உறுப்பினர்களது அனைத்து விவரங்களும் bjptn.com என்ற இணையதளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டு வருவதாக பாஜக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; தமிழகத்தில் தற்போது பாஜக.,வுக்கு 9 லட்சத்து 32 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் விவரங்கள் அனைத்தும் கட்சி இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தல் அனைத்தும் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.
இதுதவிர, தீவிர உறுப்பினர்கள் பட்டியல், கட்சி பத்திரிகைகளுக்கு சந்தா செலுத்திய வர்களின் பட்டியல், கிளைக்கமிட்டி முதல் மாநில நிர்வாகிகள்வரை அனைவரது விவரங்களும் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும். இதன்மூலம், அனைத்து விவரங்களையும் எந்த நேரத்திலும் எளிதாகப்பெற முடியும். இதை நாட்டிலேயே முதல் முறையாக தமிழக பாஜக செய்துள்ளது.
உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் கட்சியின் அமைப்புத்தேர்தல்கள் 2015-ம் ஆண்டு இறுதியில் நடைபெறும். கட்சி நிர்வாகத்தில் 100 சதவீத வெளிப்படை தன்மை இருக்கவேண்டும் என்பதற்காக அனைத்தும் இணையதளம் மூலம் நடைபெறுவதாக மோகன்ராஜூலு தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.