தமிழகத்துக்கு வரும் லேப்டாப் தொழிற்சாலை! தமிழக பாஜக இளைஞரின் சாதனை

 கடந்த 29.10.2014 தேதியிட்ட 'தமிழக அரசியல்' இதழில், 'தமிழக இளைஞரை சீனா அனுப்பும் மோடி' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டியிருந்தோம்.

பி.ஜே.பி. சார்பிலான ஒரு குழு பத்து நாள் பயணமாக சீனா செல்கிறது என்றும், சீனாவின் பொருளாதார நிலை பாற்றி ஆய்வு நடத்தித் திரும்பும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடிருந்தோம்.

அந்த முக்கியமான குழுவில் பி.ஜே.பி.யின் தேசிய இளைஞரனிச் செயலாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஏ.பி.முருகானந்தம் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்குச் சென்று அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கிராம-நகர இடைவெளி குறித்தெல்லாம் ஆய்வு நடத்தி சீனப்பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி நாடு திரும்பினார்கள் குழுவினர்.
சீனாவில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வு பற்றி அறிக்கையும் தயார் செய்து பிரதமர் மோடியிடம் அளித்திருக்கிராகள் முருகானாந்தம் உள்ளிட்ட குழுவினர்.

இந்தப் பயணத்தின் விளைவாக, பயணக் குழுவில் தமிழர் ஒருவர் இடம்பெற்றிருந்ததன் விளைவாக தமிழகத்தில் சீனாவின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு கொண்ட லேப்டாப் தொழிற்சாலை அமைய வாசல் திறந்திருக்கிறது என்ற நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

இதுபற்றி சீனாசென்றுவந்த எ.பி.முருகானந்தத்திடமே பேசினோம்.
"எங்கள் குழுவின் பயணத்தின் முக்கிய நோக்கமே சீனாவில் கிராமப் பொருளாதார வளர்ச்சி பற்றியும், இந்தியாவில் சீனா எந்தெந்த வகையில் முதலீடுகள் செய்யலாம் என்பது பற்றியும் ஆராய்வதுதான்.

இதில் சீனாவின் பொருளாதார நிலையை தென்னிந்தியாவில் எப்படி ஆக்கபூர்வமாக எதிரொலிக்கலாம் என்பது எனக்குக் கொடுக்கப்பட்ட பணி, பிரதமர் மோடியின் அறிவுரைப்படி நாங்கள் சீனாவில் பலரையும் சந்தித்தோம். பல இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தோம். இதனடிப்படையில் அறிக்கை அளித்திருக்குறோம்.

இந்தப் பயணத்தில் தமிழகத்துக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக ஒரு திட்டம் கிடத்த்திருக்கிறது. அதாவாது தென்மேற்கு சீனாவில் உள்ள சவுங்கிங் நகரத்தையும், நமது சென்னை நகரத்தையும் சகோதர நகரங்களாக ஒருங்கிணைக்க ஒரு திட்டத்தை முன்னேடுத்திருக்கிறோம்.
இதன்மூலம் சவுங்கிங் நகரத்தினரின் தொழில் முதலீடுகள் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி அமைய அதிக வாய்ப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் சீனக் குடியரசில் இங்கே மாநிலங்கள் மாதிரி பல மாகாணங்கள் இருக்கின்றன. ஆனால் சவுங்கிங் நகரம் என்பது சீனாவின் மத்திய அரசால் நேரடியாக நிர்வகிப்படும் நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்று. இதன் மக்கள் தொகை சுமார் மூன்றரை கோடி ஆகும்.

இந்த சவுங்கிங் மாகாணத்தில் துணைச் செயலாளரான ஷாங்கூ குயிங் அவர்களை எங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக சந்தித்தேன். அப்போது சென்னை நகரின் இயற்கை அமைப்பு பற்றியும் நமக்கு வைத்திருக்கும் துறைமுக வசதிகள் பற்றியும் விளக்கினேன். எங்களது இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்தையை அடுத்து சவுங்கிங் நகரத்தையும், சென்னை நகரத்தையும் 'சிஷ்டர்ஷ் சிட்டிஸ்' அதாவது 'சகோதரி நகரங்கள்' என்ற வகையில் ஒருங்கிணைத்துத் திட்டங்கள் தீட்ட முதற்கட்ட ஆலோசனைகள் முடித்திருக்கிறோம். இதன் மூலம் தமிழகத்துக்கு மிகப் பிரகாசமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது" என்று உற்சாகமாகாத் தொடர்ந்தார்.

"சவுங்கிங் நகரம் சீனாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே மிக முக்கியமான நகரமாகும்.. காரணம் உலகில் பயன்படுத்தப்படும் லேப்டாப்புகளில் இருபது சதவிகிதம் இந்த நகரத்தில் உற்பத்தியாகிறது.
இந்த நகரத்தின் உற்பத்தியாளர்கள், மற்றும் எலக்ட்ரானிக் பொருள் தயாரிப்பாளர்கள் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனென்றால் இங்கே அவர்கள் தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில்… இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட பற்பல நாடுகளுக்கு துறைமுகம் மூலம் தங்கள் உற்பத்தியை ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்தத் தொழிற்சாலை சாதாரணமானதல்ல பல்லாயிரம் கோடிகள் முதலீடுகளில் உருவாகக்கூடியது. இந்தியாவில் இளைஞர் சக்தி மிக அதிகமாக இருப்பதையும், மெக்கானிக்கல், கணிப்பொறியியல் பட்டதாரிகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் மிக அதிகமாக வெளிவந்து கொண்டிருப்பதையும் சீனக் குழுவினருடன் பகிர்ந்துகொண்டேன். இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை அதன் சுற்றுப்புறத்தில் தொழில் தொடங்க அவர்கள் ஆர்வமாக இருக்கிறாகள்.

இந்நிலையில் எங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து நாங்கள் இந்தியா திரும்பிவிட்டோம். இதையடுத்து நவம்பர் 13-ம் தேதி முதல் இருபதாம் தேதி வரை சீனக் குழுவினர் நம் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களோடு அடுத்தகட்ட விவாதங்கள்,ஆலோசனைகள் நடத்தியிருக்கிறோம். அடுத்தகட்டமாக சீனக் குழுவினர் சென்னைக்கும் வர இருக்கிறார்கள்.

இரு நாட்டு அரச ரீதியிலான ஆலோசனைகள் நடத்தப்பட்டு பிறகு…தமிழக அரசுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்புதான் மிகவும் அவசியமானது. நாங்கள் சவுங்கிங் நகரத்துக்கும் சென்னைக்கும் பாலம் போட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பாலத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது தமிழக அரசுதான்.
தமிழ்நாடு இப்போது தொழில்துறையில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருப்பதை அரசியல் தாண்டி ஒப்புக்கொள்ள வேண்டியிருகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த ஆண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் கூட்டியிருக்கிறார்.

இந்நிலையில் பி.ஜே.பி.யின் கட்சி ரீதியான குழுவில் ஓர் அங்கத்தினராக சென்று… சென்னைக்கு இப்படி ஒரு வாய்ப்பை பெற்றுவந்திருப்பதை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி நடக்கும் இந்தியர் என்ற வகையில் பெருமிதமாக உணர்கிறேன்.

விரைவில் தமிழக பி.ஜே.பி. தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களோடு இணைந்து இந்தத் தகவலை முறைப்படி தமிழக இளைஞர்களுக்கு தெரிவிக்க இருக்கிறோம். இந்த சகோதரி நகரங்கள்' திட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்திலுள்ள பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும்.

மேலும் இங்குள்ள சிறுதொழில் முதலீட்டாளர்கள், நடுத்தரத் தொழில் முதலீட்டாளர்கள் என அனைவருக்கும் பல்வேறு துணைத் தொழில்கள் மூலம் பல வாய்புகள் கிடைக்கும்.

மோடிஜியின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் ஓர் இளைஞரால் இவ்வளவு பெரிய வாய்ப்புகளை தமிழகத்துக்குக் கொண்டுவர முடிகிறது என்றால். தமிழக அரசு மத்திய அரசோடு இந்த விஷயங்கலில் ஒத்துழைத்தால் தமிழகம் தொழில்துறையில் மகத்தான வளர்ச்சியைப் பெரும்" என்று முடித்தார் முருகானந்தம். 'சகோதரி நகரங்கள்' திட்டத்துக்கான விதை இப்போது தூவப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க வெற்றிகரமான முயற்சிதான்.

இதை வளர்த்தெடுத்து தமிழகத்தில் லேப்டாப் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதேநேரம் தமிழகத்தில் பி.ஜே.பி. இதுமாதிரி விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் பட்சத்தில் அக்கட்சியின் வளர்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது.

நன்றி : தமிழக அரசியல்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...