ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றியானது, மக்கள் மாற்றத்தை மட்டுமல்ல, வளர்ச்சியை, முன்னேற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை தெளிவாக்கியிருக்கிறது. தங்கள் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை தேர்தல்களின் மூலம் அகற்றி வருவதன் மூலம் கடந்த ஒரு வருட காலமாக மக்கள் அமைதி புரட்சி ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை உணர முடிகிறது. மேலும் குடும்ப
ஆதிக்கத்தை செலுத்தி கொண்டிருக்கும் ஒவ்வொரு மாநில கட்சியையும் அந்தந்த மாநிலங்களில் ஒதுக்கி வருகிறார்கள் என்பதே உண்மை.பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, இந்த நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக சேர்ந்து கொண்டு மத்திய அரசு மீது புழுதி வாரிதூற்றுவதும், புரளிகளை கிளப்புவதும், மத, சாதிய பதட்டங்களை உருவாக்குவதும் தொடர்கிறது. ஆட்சியை இழந்த காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் இருப்பதை பொறுக்க முடியாத கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு முழுவதும் சிறுபான்மையினரை பாஜகவுக்கு எதிராக திசை திருப்பி விட முயற்சி செய்து வருவது கண்கூடாக தெரிகிறது.
தமிழகத்தில், அனைத்து கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக, தங்கள் துணைக்கு பல ஊடகங்களையும் அழைத்து கொண்டு பல இயக்கங்களை தூண்டி விட்டு வருகின்றனர். பாஜகவினர் மிகவும் கவனத்தோடு செயல்படுவதோடு, உன்னிப்பாக இருந்து எதிர் கட்சியின் தூண்டுதலுக்கு உணர்ச்சி வசப்படாமல் இருந்து பிரச்சினைகளை கையாள வேண்டியது அவசியமாகிறது. அனைத்து தீய சக்திகளும் பாஜகவுக்கு எதிராக செயல்பட எத்தனிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுவது கட்சிக்கும், தமிழக மக்கள் நலனிற்கும் உகந்தது.2016 தமிழக சட்டமன்ற தேர்தலானது குருக்ஷேத்ர யுத்தம் போன்ற ஒரு நிலைமையை தோற்றுவித்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. பாண்டவர்களாகிய பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் (இருந்தால்) ஒரு புறமும், கவுரவர்களாக மற்ற அனைத்து கட்சிகள் மறு புறமும். வெல்வது பாண்டவர்களே!
நன்றி ; நாராயணன் திருப்பதி
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.