நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில்சென்ற பாஜக பிரமுகரை மூன்றுபேர் கொண்ட கும்பல் வெள்ளிக் கிழமை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.
நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் முத்துராமன் (45). இவர், பாஜக கன்னியாகுமரி மாவட்ட வர்த்தக அணித் தலைவராக உள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனது அலுவலகத்துக்குச் செல்வதற்காக முத்துராமன், வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டார். வட்டவிளை அருகே வந்தபோது, 3 பேர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த பொதுமக்களும், கட்சியினரும் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. மணி வண்ணன் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்து ராமனை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கன்னியா குமரி மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் தாக்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. இதற்கு பின்னணி என்ன என்பதை காவல்துறையினர் கண்டறிந்து அவர்களை கைதுசெய்ய வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்றார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.