70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இத்தேர்தலில் பாஜக 45 தொகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
பாஜகவினர் கூறியதாவது, முதல் அமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் தேர்தலை சந்திக்கிறோம். நரேந்திரமோடி பிரமராகும் முன்னரே டிசம்பர் 2013ல் தேர்தல் நடந்த போது பாஜக 32 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சி அமைக்க முடியவில்லை. 36 தொகுதிகள் இருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம். பாஜக.,வைவிட குறைவான தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தது.
அப்பவே பாஜக 32 தொகுதிகளை கைப்பற்றிய போது, நரேந்திர மோடி அலைவீசும் இந்த நேரத்தில் ஜெயிப்பது சுலபம். நாங்கள் 32 தொகுதிகளை 36 ஆக உயர்த்த விரும்ப வில்லை. 32 தொகுதிகளை 45ஆக உயர்த்துவது எப்படி என்று யோசித்துவருகிறோம். குறைந்த பட்சம் 45 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் திட்டம்வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
டெல்லியை பொறுத்த வரையில் 6 மற்றும் 7 இடங்களில் நரேந்திரமோடி பங்கேற்றும் வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்கிறோம். மேலும் பல்வேறு வகைகளில் விளம்பரம்செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.