பீகாரில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில், பாஜக தீவிரம்

 பாட்னா: ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக., அடுத்ததாக, பீகாரில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில், தீவிரமாக களம் இறங்கியுள்ளது .

லோக்சபா தேர்தலில், பா.ஜ.க, பெருவெற்றிபெற காரணமாக இருந்த மோடி அலை, இன்னும் ஓயவில்லை என்பதை நிரூபிப்பதுபோல, சமீபத்திய சிலமாதங்களில், மகாராஷ்டிரா, அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தல்களில், பா.ஜ., வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அத்துடன், ஜம்மு – காஷ்மீரிலும், அதிக இடங்களில் வெற்றிபெற்றது.

இதையடுத்து, பாஜக., தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த இலக்கு, பீகார் மாநிலமாக உள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில், பீகாரில் சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தலில், பாஜக., வெற்றிபெற்றால், இந்திபேசும் மாநிலங்களில், பாஜக.,வின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
அத்துடன், லோக் சபா தேர்தலுக்கு முன், பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகி விராப்பு பேசிய , பீகார் மாநில முன்னாள் முதல்வர் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதிஷ்குமாருக்கு பதிலடி தந்ததை போன்றாகிவிடும் .

இது குறித்து பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், பாஜக., மூத்த தலைவருமான, சுஷில்குமார் மோடி கூறியதாவது: பீகாரில், பாஜக.,வை ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்பதில், எங்கள் கட்சியின் தேசியதலைவர், அமித்ஷா தீவிரமாக உள்ளார். அதற்கான பணிகளில் அக்கறை காட்டி வருகிறார். சமீபத்தில், பீகார் பாஜக.,வின் உயர்மட்ட குழு கூட்டத்தைகூட்டி ஆலோசித்தார்.

அத்துடன், வரும் 23ம்தேதி, பாட்னா நகருக்கு விஜயம்செய்து, கட்சியினருடன் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்க உள்ளார். ஏப்., 14ம் தேதி, பாட்னா காந்தி மைதானத்தில் நடை பெறும், பிரமாண்ட பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். இவ்வாறு, சுஷில்குமார் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...