தேர்தல் பழிவாங்கும் நோக்கத்துடன் ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம், அவர் நடத்தும் பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கொடுத்த பணமோசடி புகாரின்பேரில், திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சுப்பிரமணியம், தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் என்.கண்ணன், ஜி.சீதாராமன், டபுள்யு. கிறிஸ்துராஜ் ஆகியோர் மீது அண்மையில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதில், எங்களது பொறியியல் கல்லூரிகளின் மாண வர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
பயிற்சி வழங்கிய தற்கான கட்டணம் ரூ.1.13 கோடி வழங்கவில்லையென அந்நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணை மேற்கொண்ட மாநகரக் காவல் ஆணையர், நாங்கள் தாக்கல் செய்த ஆவணங்களைப் பரிசீலனை செய்து கல்லூரி நிர்வாகத்தின் மீது எவ்வித தவறும் இல்லை என வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில், தற்போது மேற்படி தனியார் நிறுவனம் மீண்டும் கொடுத்துள்ள புகாரின் பேரில், மாநகர குற்றப் பிரிவு போலீஸார் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல், பயிற்சி கட்டணத்தை உயர்த்தி விட்டு, அதற்கான தொகையையும் கோருகிறது. இந்தப்புகாரில் முகாந்திரம் இல்லையென்பதால் ஏற்கெனவே முடித்துவைத்த நிலையில், இடை தேர்தலில் போட்டியிடுவதாலும், அரசியல் காரணங்களுக் காகவும் போலீஸார் மீண்டும் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சுப்பிரமணியம் மீது 2011-இல் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அவர் போட்டியிடும்போது மீண்டும் வழக்குப்பதிவு செய்திருப்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், சுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மனுதாரர்களில் சுப்பிரமணியம் இடைத் தேர்தலில் போட்டியிடுவதால் தேர்தல் முடிந்த பிறகு திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திடவும், மற்ற மூவரும் இரு வாரங்களுக்கு திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவில் தினமும் மாலை 6 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிட்டார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.