அந்நியர்கள் இந்தியாவை கேவலமாக சித்தரிப்பதை ஆதரிப்பது தான் கருத்து சுதந்திரமா?

 இந்தியா பாம்பாட்டிகள், பிச்சைகாரர்கள் மிகுந்த ஏழைகள் நாடு என்ற ……. "ஸ்லம் டாக் மிலியனர்" திரைப்படம்.  இந்தியா காமவெறிபிடித்த " ரேப்பிஸ்ட்கள் நாடு" -என்கிற இண்டியாஸ் டாட்டர்" டாக்குமெண்ட்ரி

"கருத்துச் சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது" – பத்திரிக்கைகள் ஊடகங்கள் இந்நாட்டில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை".

இப்படித்தான் கடந்த ஒரு வாரமாக கூக்குரல்கள், விவாதங்கள், மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. உண்மை என்ன?

ஊடகங்கள் தாங்களாக ஒருவிஷயத்தை எடுத்து– தனக்கு சாதகமான வரிகளை மேற்கோள் காட்டி,– தனக்கு "ஒத்த" கருத்தியலாளர்களை வைத்து கூட்டம் போட்டு",–" தன் கருத்தே சரி" என்கிற மாதிரி கேள்விகள் கேட்டு,– கருத்துக்களை பெற்று– வெளியிட்டு– தீர்ப்பு சொல்லும் ஒரு "புதிய நீதிகோர்ட்டுகளாக" உருவாகி வருகிறது.

அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் "இந்தியாவின் மகள்" என்கிற "லெஸ்லி எட்வின்" என்கிற பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் எடுத்த "டாக்குமெண்டரியை" வெளியிடக்கூடாது என்கிற இடைக்கால நிறுத்தம் … தடை அல்ல "Restrain" பற்றிய விவாதங்கள்.

இந்த "Restrain" டெல்லி மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டின் நீதிபதி திரு. புனித் பாவா கொடுத்த தீர்ப்பாகும்! "மத்திய அரசு தடை செய்தது" என்பது இங்கே எப்படி வந்தது? தடை என்பது "Ban"– இந்த Restrain-ம் நிரந்தரம் அல்ல. இந்த Restrain-ம் முழு டாகுமெண்டரிக்கும் அல்ல… வழக்கு விசாரணையில் உள்ள " நிர்பயா" குற்றவாளிகளின் இன்டர்வியூக்கு" மட்டும்தான்.

சரி இது ஒருபுறம் இருந்தாலும், படத் தயாரிப்பாளர் பிரிட்டிஷ் பெண் லெஸ்லி வுட்வின் கூற்றுப்படி== அவர் மத்திய உள்துறை அமைச்சகம், திஹார் ஜெயில் ஆகியவற்றின் clearance-ஐ பெற்றுவிட்டேன்.. என்று பேட்டி அளித்திருக்கிறார்.

அவரது பேட்டியிலும் அவருக்கு ஆதரவாக வெகுண்டு எழுந்திருக்கும் மீடியாக்களிலும் "மறைக்கப்பட்ட" மிக முக்கியமான உண்மை… லெஸ்லி உட்வின் திஹார் ஜெயில் அதிகாரிகளிடம் படம் எடுக்க கேட்ட அனுமதி…." இந்த திரைப்படம் "ஆராய்ச்சி மாணவர்களுக்காக", "academic purpose"– என்பதுதான் ஆனல் நடந்தது என்ன?

நேற்று திங்கள் கிழமை உலக சந்தையில் இதை விற்பதற்கு "வியாபார நோக்குடன்" ஹாலிவுட் திரைப்பட நடிகர்களை வைத்து நியூயார்க் நகரில் வெளியிட்டு இருக்கிறார்? இது தான் academic ஆ?

"கல்லூரிகள், பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடம் நடத்த" என்று அனுமதி கேட்டு- படம் எடுத்துவிட்டு, இந்திய வியாபாரத்திற்கு NDTV-யும் உலக வியாபாரத்திற்கு ஹாலிவுட்டையும் தேர்ந்தெடுத்ததை "நம் நாட்டு கருத்து சுதந்திர ஆதரவாளர்கள்" ஏன் சவுகரியமாக கவனிக்கவில்லை…..

இந்தியாவை "ரேப்பிஸ்டுகள் நாடு" என்று உலகமுழுவதும் இப்படம் கொண்டு செல்லும் அதுதான் அவரின் நோக்கமும் கூட என்று நாம் சொன்னால் நம்மீது "கருத்து சுதந்திரம்" வெகுண்டு எழும்.

ஆனால் இன்றைய நாளிதழில், ஜெர்மனில், ஆரய்ச்சி மாணவர் ஒருவர், அவர் இந்தியர், அவருக்கு தன் குழுவில் சேர்த்துக்கொண்டு பாடம் நடத்த, அந்த ஜெர்மானிய பேராசிரியர் மறுத்திருக்கிறார். காரணம், இந்தியர ரேப்பிஸ்டுகள் நாடு, அதிலிருந்து வந்திருக்கும் இந்திய மாணவரை நம்பத்தயாரில்லை என தன்னுடைய இணையதளத்தில் கூறி –அனுமதி மறுத்திருக்கிறார்…

இந்நிலைக்கு யார் காரணம்? கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் "இந்திய கௌரவத்தை சீர் குலைக்க முயற்ச்சிக்கும்" பிரிட்டிஷ் படங்களுக்கு வக்காலத்து வாங்கும் நண்பர்கள் சொல்வார்களா?

பிரிட்டன் –இந்திய மக்கள் தொகையில் 4-ல் ஒரு பங்கு, அங்கு நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நம்மைவிட 3 மடங்கு அதிகம்! அந்த கொடுமை செய்தவர்களை படம் எடுத்து உலகம் முழுவதும் வினியோகிக்க நமது "தூர்தர்ஷனுக்கு" பிரிட்டிஷ் அரசு அனுமதி கொடுக்குமா?

கருத்து சுதந்திரத்தில் பிரிடின், இந்தியா என்று ஊடகவியலாருக்கு பாகுபாடு உண்டா?

ஸ்லம்டாக் மிலினியர்" என்ற திரைப்படம் ஆஸ்கார் பரிசுகளை வென்றது! ஏன்? இந்தியாவை பிச்சைக்கார நாடாக காண்பித்ததற்காக?

"இந்தியாவின் மகள்" படத்தை உலகமுழுவதும் திரையிட்ட அன்றே ஜெர்மனியில் இந்திய ஆராய்ச்சி மாணவருக்கு இடம் தர மறுத்துள்ளனர்!

இந்த வகையாக "இந்தியாவை கேவலமாக அந்நியர்கள் சித்தரிக்கும் செயல்பாடுகளை ஆதரிப்பது தான் கருத்து சுதந்திரம் என்றால்– இந்தியாவை, காக்க நாம் இன்னும் போராட வேண்டியிருக்கும்.

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...