பாஜக-பிடிபி கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் முதல்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த இருகட்சிகளிடையே பல்வேறு விவகாரங்களில் நிலவும் வேறு பாடுகளைக் களைந்து சுமுகமான முறையில் ஆட்சி நடத்துவதற்காக, இருகட்சிகளின் முக்கிய தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது.
இது குறித்து மாநில பாஜக தலைவரும், ஜம்முதொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜுகல் கிஷோர் கூறியதாவது:
எங்கள் கூட்டணியின் செயல்திட்டத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக, இரு கட்சிகளையும் சேர்ந்த 10 பேரை உறுப்பினர்களாக கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் துணை முதல்வர் நிர்மல்சிங் இந்த குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் முதல்கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், இனி மாதம் ஒருமுறையோ அல்லது தேவைப்படும் நேரத்திலோ நடைபெறும்.
இந்தக்குழு, கூட்டணியும், அரசும் சுமுகமாக செயல்பட உதவும். ஜம்முகாஷ்மீர் மாநில மக்கள் நலனுக்காக எடுக்க வேண்டிய பல்வேறு முயற்சிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைகளை வழங்கும் என்றார் அவர்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.