யோகாவை மதத்துடன் தொடர்பு படுத்த கூடாது என பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சொல்கிறார். உலகம் முழுவதும் வருகிற ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா அங்கீகரித்து அறிவித்துள்ளது.
இதை யடுத்து இந்தியாவில் முதல் சர்வசேத யோகாதினத்தை விரிவாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்துவருகிறது. இதற்காக பிரதமர் மோடியே யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள போன்ற படங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு மத்திய அரசு பிரசாரம்செய்து வருகிறது. மேலும் அன்றைய தினம் டெல்லியில் ராஜ்பாத்தில் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சிக்கு சுமார் 40 ஆயிரம்பேரை திரட்டவும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் ராஜ்பாத்தில் பிரதமர் மோடி யோகாசெய்வார் என்கிற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. அன்றைய தினம் அவர் யோகா பயிற்சியில் ஈடுபடமாட்டார் என்றும், திரண்டவர்கள் முன்பாக உரையாற்றுவார் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கான்பூரில் நடைபெற்ற கான்பூர்-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் ரயிலை கொடி அசைத்து தொடங்கிவைத்த பாஜ மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், யோகா இந்தியாவின் பாரம்பரியமான உடற் பயிற்சி முறையாகும். இதை எந்த மதத்துடனும் இணைக்க வேண்டியதில்லை. அவ்வாறு இணைத்து எதிர்ப்பவர்களை புறக்கணித்து விடுங்கள். யோகா பயிற்சிசெய்வதன் மூலமாக உடலில் பல்வேறு நோய்களும் குணமடைவதாக தெரியவந்துள்ளது. மற்றவர்கள் 5 முறை தொழுகை நடத்துகின்றனர். அதுவும் ஒருயோகா முறைதான் . மேலும் சர்வதேச யோகா தினத்தின் போது பங்கேற்க அனைவரும் வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.