மந்திரிகள் பதவி விலக தேவை இல்லை

 காங்கிரஸ் குற்றம் சாட்டிய மந்திரிகள் பதவி விலக தேவை இல்லை என பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டம் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, வெங்கையா நாயுடு ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது.

இதில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முதல்–மந்திரிகள் வசுந்தரா ராஜே, சிவராஜ்சிங் சவுகான் பதவி விலக தேவை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த பா.ஜ.க மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:–

காங்கிரஸ் கோரிக்கை விடுப்பதுபோல் மந்திரிகள் யாரும் பதவி விலக மாட்டார்கள். அதுபற்றிய கேள்விக்கே இடமில்லை. மந்திரிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க எம்.பி.க்கள் துணை நிற்கின்றனர்.

நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்வதற்கு காங்கிரஸ் கட்சிதான் பெரியதடையாக உள்ளது. எதிர்க்கட்சியின் இந்த அணுகுமுறை கண்டனத்துக் குரியது மற்றும் இடையூறை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று பா.ஜனதா எம்.பி.க்கள் குழு கண்டித்துள்ளது.

50 ஆண்டுகளாக நாட்டை ஆட்சிசெய்த காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த போது சில நேரம் அழிவை ஏற்படுத்தும் செயல்களில் பங்கு வகித்துள்ளது. இப்போதுதான் அழிவை உண்டாக்கும் எதிர்க் கட்சி என்ற மோசமான நிலைக்கு இறங்கி வந்திருக்கிறது.

காங்கிரஸ் தொடர்ந்து இந்த பிரச்சினையை எழுப்பிவருவதால் அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு அடிபணிந்து விடாது. நாட்டை பொருளாதார வளர்ச்சிப்பாதையில் பா.ஜனதா அரசு முன்னெடுத்து செல்லும். ஏழைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...