எந்த வகை பிகாரி அடையாளத்தை நிதீஷ் வெளிப்படுத்தியுள்ளார்?

 பிரதமர் மோடிக்கு, இரவு விருந்துக்காக விடுத்த அழைப்பை ரத்துசெய்ததன் மூலம், எந்த வகை பிகாரி அடையாளத்தை நிதீஷ் வெளிப்படுத்தியுள்ளார்? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இரவு விருந்துக்கு முதல்வர் நிதீஷ் குமார் அழைப்பு விடுத்திருந்ததார், பின்னர் அந்த அழைப்பை ரத்து செய்துவிட்டதாகவும் கூறினார்.

இதன் மூலம் தன்னை மட்டுமல்லாது, மகாதலித் சமூகத்தைச் சேர்ந்தவரான முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியையும், நிதீஷ் அவமானப் படுத்திவிட்டதாக மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "நிதீஷ் குமாரின் மரபணுக்களில் சிலகுறைபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது; ஏனெனில், ஜனநாயகம் குறித்த அவரது மரபணு அப்படித்தான் இருக்கிறது; ஜன நாயகத்தில் அரசியல் எதிரிகளுக்கும்கூட நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்புதெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, நிதீஷ் குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பிகார் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீங்கள் (மோடி) தெரிவித்த வார்த்தைகள், மாநிலத்தில் உள்ள பெரு வாரியான மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளன.

உங்களிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள், உங்களது பதவிக்கு பொருத்தமானதாக இல்லை என நாங்கள் கருதுகிறோம். எனவே, அதை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று நிதீஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள பிகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு, இரவு விருந்துக்காக விடுத்த அழைப்பை ரத்துசெய்ததன் மூலம், எந்த வகையான பிகாரி அடையாளத்தை நிதீஷ் வெளிப்படுத்தி யுள்ளார்?

கடந்த 2010ம் ஆண்டில் பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக, அப்போதைய குஜராத் முதல்வரான மோடி அனுப்பிவைத்த ரூ.5 கோடி நிதியுதவியையும், நிவாரண பொருள்களையும் திருப்பி அனுப்பியவர்தான் நிதீஷ்குமார் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...