பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளர் திரு.H.ராஜா அவர்களை குறிவைத்து தாக்கி கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. திரு.H.ராஜா அவர்கள் தனது கருத்துகளை ஜனநாயக முறைப்படி எடுத்துவைக்கும்போது அதனை ஜனநாயக முறையில்

எதிர்கொள்ள தயாராக இல்லாமல் பயங்கரவாதத்தை கையில் எடுத்து கொலைவெறி தாக்குதல்கள் நடத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது. நேற்று(13.07.2015) திரு.H.ராஜா அவர்களின் காரைக்குடி இல்லத்தில் இரவு10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று இரு பயங்கரவாதிகள் அவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அவர் வீட்டை எரித்து குடும்பத்தோடு கொலை செய்ய முயன்று இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

தமிழ்நாடு காவல்துறை திரு.H.ராஜா அவர்கள் வீட்டை தாக்கியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உரிய தண்டனை வழங்கவேண்டும் என்பதோடு இதற்கு பின்னணியில் இருந்து செயல்படுபவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரு.H.ராஜா அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்

பொன்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply