ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவுவிசாரணை செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவு செய்துள்ளத,

உ, பி பிரபல டாக்டர் ராஜேஷ் தல்வார்ரின் 14 ‌வயது மகள் ஆருஷி , மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம் ராஜ் ஆகியோர்

கடந்த 2008ம் ஆண்டு மர்மமான முறையில் படு கொலை செய்யப்பட்டு படுக்கையறையில் கிடந்தனர். இந்த கொலை வழக்கில் முதலில் தந்தை டாக்டர் ராஜேஷ்தல்வார் மிது சந்தேகம் எழுந்தது சி.பிஐ. அவரை 2008-ல் கைது செய்து விசாரணை செய்தது . பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார,

மேலும் சி.பி.ஐ.தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை செய்த போதிலும் கடந்த இரண்டரை வருடங்களாக இந்த வழக்கின் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் ஆருஷி கொலைவழக்கை முடிப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Leave a Reply