ஊழல் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புற்று நோயை போன்று வேகமாக பரவி வருகிறது. கதிரியக்க சிகிச்சை தந்து புற்று நோயை அளிப்பது போன்று , ஊழலை ஒழிக்க, அரசியல், நீதித் துறை மற்றும் அரசுத்துறைகளுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டியது அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

 

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அப்துல் கலாம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது : ஊழல் நடவடிக்கைகள் இந்தியாவில் மிகப பெரிய பிரச்னையாக_உருவெடுத்துள்ளது. அரசுத் துறைம அரசியல் மற்றும் நீதி துறைகளில் இந்த ஊழல் ஊடுருவி உள்ளது. புற்று நோயை போன்று வேகமாக பரவிவரும் இந்த பிரச்னையை கட்டுபடுத்த , புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சையை அளிப்பது போன்று , இந்த துறைகளுக்கும் சிகிச்சை தர வேண்டும். அதாவது, அரசு துறை, அரசியல் மற்றும் நீதி துறைகளில் ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவது. மிகப்பெரிய சவாலான-விஷயம். இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள் மூலமாக மட்டுமே, இதை செய்ய இயலும் அனைவரும் ஒன்றிணைந்து , இதை சாதிக்க வேண்டும். ஊழல் அதிகரிப்பதன் காரணமாக நாட்டு மக்களுக்கு ஜனநாயத்தின் மீது நம்பிக்கை குறையும். எனவே இதை தடுப்பதற்க்கு சரியான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் நடவடிக்கைகள்-தொடர்ந்தால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை யாராலும் தடுக்க இயலாது . இதனால் பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய இடையூறாக இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .

Leave a Reply