ஆதார் அடையாள அட்டை திட்டத்தின்மூலம், இந்திய அரசுக்கு ரூ.6,700 கோடிவரை மிச்சமாவதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.

இந்திய அரசின் ஆதார் அடையாள எண் சுமார் 100 கோடி பேருக்கு வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் ஏழைமக்கள் தங்களுக்கான நலத் திட்டங்களை எளிதாக பெற முடிகிறது. அதேபோல, நலத்திட்டங்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் இந்த ஆதார் எண் அரசுக்கு உறுதுணையாக உள்ளது.

 ஆதார் கார்டு பயன்பாட்டினால் தேவையற்ற முறையில் பண விரயம் தடுக்கப்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறைகிறது. அரசின் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப் பட்டுள்ளன. இதனால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,700 கோடி(1 பில்லியன் டாலர்கள்) மிச்சமாகிறது  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply