பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் இரண்டாம் கட்ட ரதயாத்திரை மதுரையிலிருந்து தொடங்குகிறது .

முதற்கட்ட ரதயாத்திரையை பீகாரிலிருந்து துவங்கியது அது மொத்தம் 38_நாட்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல இருக்கிறது .

அக்டோபர் 27ம்தேதி அத்வானி மதுரைக்கு வருகிறார். மதுரையிலிருந்து அவர் தனது இரண்டாம் கட்ட யாத்திரையை துவங்குகிறார் . மதுரையில் துவங்கும் இந்தயாத்திரை திருவனந்தபுரம்_வரை செல்கிறது.

அக்டோபர் 27ம் தேதி இரவு, மதுரை மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடக்கும் பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றார்.

மறுநாள் மதுரையிலிருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்_. புளியங்குடி, கடைய நல்லூர் வழியாக, திருவனந்த புரத்திற்கு ரதயாத்திரை செல்கிறது. இதை பாரதிய ஜனதா தலைமை அறிவித்துள்ளது.

Leave a Reply