கடந்த 2001ம் ஆண்டு இந்திய பார்லி மென்ட் மீது லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷே முகமது தீவிரவாத அமைப்புகள் இணைந்து தாக்குதல் நடத்தியது . இதில் பலர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட அப்சல்குருவுக்கு கடந்த 2004ம் ஆண்டு மரண தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. தனது மரணதண்டனையை

ரத்து செய்யகோரி, அப்சல்குருவால் அனுப்பபட்ட கருணைமனு ஜனாதிபதியால் நிராகரிக்கபட்டது.

இந்நிலையில், பார்லிமென்ட் தாக்குதல் தீவிரவாதி அப்சல்குருவின் தண்டனையை குறைக்க வலியுறுதும் தீர்மானம் ஜம்முகாஷ்மீர் சட்ட சபையில் இன்று தாக்கலாக உள்ளது , அதற்கு எதிர்ப்புதெரிவித்து பா.ஜ.,வினர் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply