அமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை

5 லிட்டர் தண்ணீரில் அரை கிலோ மாட்டு சாணத்தை கரைக்க வேண்டும். பிறகு அரை லிட்டர் மாட்டு சிறுநீரை அதில் கலக்க வேண்டும். பிறகு 125 கிராம் பனை வெல்லத்தை நன்கு

பொடியாக்கி அதில் கலக்கி விட வேண்டும். கட்டி இல்லாமல் கலக்கிய பிறகு மூடி நிழற்பாங்கான இடத்தில் 24 மணி நேரம் வைக்கவேண்டும், 24 மணி நேரம் கழித்து 6 லிட்டர் அமிர்த கரைசல் தயாராகிவிடும்.

பயன் படுத்தும் முறை, ஒருபங்கு கரைசலுடன் பாத்து பங்கு தண்ணீர்சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு_ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்கால் நீரிலும் கலந்து விடலாம். அமிர்த கரைசலை நிலத்தில்தெளித்த 24மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்களும் நோய் நொடி இல்லாமல் வளரும்.

பொதுவாக இந்த கரைசலை15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாக காண பட்டால் வாரம் ஒரு முறை கூட தெளிக்கலாம். வசதியிருந்தால் தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

இயற்க்கை உரம் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை

Leave a Reply