காஷ்மீர் யாருக்கு சொந்தம்காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா பாகிஸ்தானுக்கா… (அ) தனி நாடாக இருக்க வேண்டுமா? இன்றும் தீர்க்கபடாமல் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் இந்தபிரச்னையின் தொடக்க புள்ளியைப் பற்றி 'எ மிஷன் இன் காஷ்மீர்' எனும் நூலை ஆண்ட்ரூ வொயிட்ஹெட் எழுதியுள்ளார் .

பிபிசி.யின் செய்திதொடர்பாளரான அவர் வெகுஎச்சரிக்கையாக பிபிசி.க்கும் இந்த புத்தகத்துக்கும் எந்தசம்பந்தமும் இல்லை என முன் கூட்டியே சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிக்கிறார். ஒரு வகையில் இந்த புத்தகம் எழுதும்வாய்ப்பு அவருக்கு மிக எதேச்சையாகவே கிடைத்திருக்கிறது. சுய ஆர்வத்திலேயே இதை எழுதியுள்ளார் . பிரிவினையின்போது நடந்த சம்பவங்களைத்தொகுக்க காஷ்மீருக்கு வந்தவர், தான் பேட்டி எடுக்கவேண்டிய நபர் கிடைக்காமல் போகவே சோர்வுடன் திரும்பிப்போகும் வழியில் ஒருமடாலயத்தை பார்த்து விட்டு மெதுவாக உள்ளே நுழைந்திருக்கிறார். ஒரு புதிய தொரு உலகத்துக்குள் எடுத்துவைத்த முதல் காலடி அது என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.

அந்த மடாலயத்தில் தான் காஷ்மீரின் மீதான பாகிஸ்தானின் முதல் அத்துமீறலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஒருவர், கிட்டத்தட்ட அந்த வ்ரலாற்றை சொல்லி விட்டு இந்த உலகிலிருந்து விடை பெற வேண்டும் என நினைத்தது போல், 91 வயதில் மரண விளிம்பில் உயிரை கையில்பிடித்தபடி இருந்து வந்திருக்கிறார்.

அவரிடம் இருந்து பெற்ற விஷயங்களே ஆண்ட்ரூ வொயிட் ஹெட்டை இந்தபுத்தகத்தை எழுத தூண்டியுள்ளது . 1947 கால கட்டத்து காஷ்மீரின் சித்திரத்தை நம் மனக்கண் முன் கொண்டு வருவதில் கடும் சிரமத்தை_மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் . இந்தியா மற்றும்  பாகிஸ்தானுக்கு

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எல்லைக் கோடு என்ற ஒன்றை பிரிட்டிஷார் வரைந்துகொடுத்தார்கள் என்றாலும் எந்த ஒரு தனிப்பட்ட சம்ஸ்தானத்தையும் இந்தியாவுக்கு (அ) பாகிஸ்தானுக்கு சொந்தம் என பிரித்துக் கொடுக்க வில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப எந்ததேசத்தில் சேரவேண்டுமோ சேர்ந்துகொள்ளலாம். அல்லது தனித்தும் இருந்துகொள்ளலாம் என்று தான் பிரிட்டிஷார் சொல்லியிருந்தார்கள்.

பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்த பட்டிருந்த இந்தியாவானது பாகிஸ்தான், இந்தியா என இரு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் யாருடன்சேர்வது எனும் பிரச்னை ஒரு சில மாதங்களிலேயே சுமுகமாக ஒருமுடிவுக்கு வந்துவிட்டது. ஒரேயொரு சமஸ்தானத்தை தவிர. அதுதான் காஷ்மீர்.

ஏன் காஷ்மீர் பிரச்னை இவ்வளவு சிக்கலாக உள்ளது ?

உண்மையில் என்ன தான் நடந்தது என்பதை ஆண்ட்ரூ வொயிட்ஹெட் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார் . இந்திய ராணுவ குறிப்புகளில்_ஆரம்பித்து காஷ்மீரரின் மீதான பாகிஸ்தான் கூலிப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யபட்டவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைத்தகடிதங்கள் வரை அனைத்து அதிகார பூர்வ, அதிகாரபூர்வ மற்ற ஆவணங்களை கொண்டு காஷ்மீர் விவகாரம் குறித்த ஒருவிரிவான சித்திரத்தை முன் வைக்கிறார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் இந்தியாவின் மீது வைக்கப்படுவ துண்டு. அவற்றுக்கு இந்தநூலில் தரப்பட்டிருக்கும் ஆவணங்கள் ஒருதெளிவான பதிலை தருகின்றன.

1. காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கை கட்டாயப் படுத்தி மிரட்டி இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி விட்டது.

2. இந்தியாவுடன் காஷ்மீர் சேருவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்திய ராணுவம் காஷ்மீரில் கால்பதித்து விட்டது. அதாவது, சட்டப்படி பார்த்தால் அது மற்ற்றொரு நாடான காஷ்மீரின் மீதான ஆக்கிரமிப்பு தான்.

3. இந்தியாவுடன் சேர்வதுதொடர்பான காஷ்மீரிகளின் எண்ணத்தை அறிந்து கொள்ளப் பொது வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்கு கொடுக்கப்பட்ட து. ஆனால், நடத்தப்படவில்லை.

ஆண்ட்ரூ வொயிட்ஹெட் தொகுத்துதந்திருக்கும் ஆவணங்களின்படி மேலேசொன்ன குற்றச்சாட்டுகளை அலசிப்பார்ப்போம்.

ஒரு வகையில் காஷ்மீர் விவகாரம் அன்று அதிகாரத்தில் இருந்த நான்குபேரால் தீர்மானிக்கபட்டிருக்கிறது. மத அடிப்படையில் ஒருதேசத்தை உருவாக்கிய ஜின்னா… சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு… காஷ்மீரின் முதல்வர் ஷேக் அப்துல்லா… காஷ்மீரின் மன்னர் ஹரிசிங்.

 ஜின்னாஇந்த புத்தகத்தை படிக்கும் போது, 1947-ல் காஷ்மீரின் மீது மூர்க்க தனமான தாக்குதல் நடத்த வேண்டும் எனும் ஜின்னாவின் வெறி நன்கு புலனாகிறது . இந்தியாவுடன் தான் சேரவேண்டும். ஆனால், அதிகாரம் நம்வசமே இருக்கவேண்டும் என மன்னர் ஹரி சிங்கின் விருப்பம் தெளிவாக புலனாகிறது (பதான் கூலி படையை காஷ்மீரின் மீது ஜின்னா ஏவியதற்கு முக்கியகாரண்மே ஹரி சிங் இந்தியாவுடன் சேர முடிவெடுத்தது தான். சிலர் சொல்வது போல், பதான் கூலிப் படை தாக்கியதால் மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் சேர முடிவெடுக்கவில்லை. அவர்களின் தாக்குதலை பயன் படுத்தி இந்தியா வலுக் கட்டாயமாகவும் இணைத்து கொண்டிருக்கவும் இல்லை).

மன்னரின் அதிகாரம் பறிக்கப்பட் டு மக்கள்பிரதிநிதி ஒருவரிடம் தரப்படவேண்டும் எனும் நேருவின் விருப்பம் விவரிக்கப்பட்டுள்ளது . புதியமக்கள் சக்தியாக உருவெடுத்திருந்த நேஷனல் கான்ஃப்ரன்ஸ் கட்சி தலைவர் ஷேக் அப்துல்லா, இந்தியாவுடன் சேர்வது தான் காஷ்மீருக்கு நல்லது என கருதியது தெரிய வருகிறது. இந்த நான்கு பேரில் இந்தியாவுடன் இணைவது என்ற முடிவையே ஜின்னாவை தவிர மூவரும் தன்னிச்சையாக எடுத்துள்ளார்கள் என்பது ஆண்ட்ரூ வொயிட்ஹெட் தொகுத்த ஆவணங்களிலிருந்து புலனாகிறது.

பாகிஸ்தானுடன் தான் காஷ்மீருக்கு நிறைய வர்த்தகத்தொடர்புகள் உள்ளன . காஷ்மீரில் முஸ்லீம்கள் தான் அதிகம் உள்ளார்கள் . எனவே, பாகிஸ்தானுடன் தான் சேர அதிகவாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்பார்த்ததாக அவர்கள்தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. ஆனால், மவுண்ட் பேட்டன் இந்தியாவுடன் சேர்வது தான் காஷ்மீருக்கு நல்லது எனும் தொனியில் பேசியதாகவும் தெரிய வருகிறது. மன்னரை மிரட்டி காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துக்கொண்டதாக பொதுவாகச் சொல்லப்படுவதை இந்நூலில் தரப்பட்டிருக்கும் ஆவணங்கள் மறுக்கின்றன.

காஷ்மீரின் அப்போதைய பிரதமராக இருந்த ராம சந்திர கக் என்பவர் மன்னர் ஹரி சிங்கிடம் மன்னர் ஹரி சிங்பாகிஸ்தானுடன்தான் சேரவேண்டும் என வாதிட்டுரிக்கிறார் . ஆனால், மன்னர் ஹரிசிங்கோ முதல் வேலையாக அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு இந்தியச்சார்பாக இருக்கும் மெஹர்சந்த் மஹாஜனைப் பிரதமர் பதவியில் அமர்த்தி இருக்கிறார் (மெஹர்சந்த் மஹாஜன், பஞ்சாபை பிரிக்கும் எல்லை வரைவுக்குழுவில், இந்தியாவுக்கு சாதகமாக அதிகப் பகுதிகளை வென்றெடுக்க உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்). இந்திய தலைவர்களை காஷ்மீருக்கு வரும்மாறு ஹரி சிங் பல முறை அழைப்பு விடுத்திருக்கிறார் . அனால் ஜின்னா காஷ்மீருக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்த போதும் வேண்டாம் என மறுத்திருக்கிறார்.

காஷ்மீர் ராணுவத்தின் தலைவராக இருந்த ஆங்கிலேயர் ஒருவரை விலக்கி விட்டு அந்தப்பொறுப்பை இந்தியர் ஒருவருக்கு தந்திருக்கிறார். இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க விரும்பியுள்ளார் . அனால் அதற்கு ஆங்கிலேய அரசு அனுமதி தரவில்லை என்பதால் அது முடியாமல் போய் விட்டிருக்கிறது. மக்களாட்சி_தொடர்பான சீர் திருத்தங்களை கொஞ்சம் தள்ளிப்போடும்படி நேருவிடம் ஹரி சிங் கேட்டு கொண்டிருக்கிறார். இவை அனைத்தும் பாகிஸ்தானின் கூலி படைகள் காஷ்மீரின் மீது தாக்குதல்நடத்துவதற்கு முன்பாகவே , இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி_மன்னரிடம் இந்தியா கேட்பதற்கு முன்பே நடைபெற்றவை என்பது ஆண்ட்ரூ தொகுத்த ஆவணங்கள் மூலம் தெள்ளத்தெளிவாக தெரியவருகின்றன.

இவற்றை எல்லாம் வைத்துப்பார்க்கும் போது, மன்னர் ஹரிசிங்குக்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் முழு விருப்பம் இருந்துள்ளது .இருப்பினும் ஷேக் அப்துல்லாவை முன்னிலை படுத்துவது தான் அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நேருவிடம் கூட அவர் கொண்டுவர விரும்பிய மக்களாட்சி சார்ந்த சீர்திருத்தங்களை கொஞ்சம் தள்ளிப்போடும்படி மறை முகமாகக் கேட்டு கொண்டார் என்பது தெரியவருகிறது.

அடுத்த விஷயத்திற்கு வருவோம் இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பதாக மன்னர் எப்போது கையெழுத்திட்டு கொடுத்தார்? அவர் கையெழுத்து போட்டுக்கொடுத்த பின்புதான் இந்திய ராணுவம் அங்கு கால்பதித்ததா அல்லது அதற்கு முன்பே களமிறங்கிவிட்டதா? இந்த அட்சர லட்சம்பெறும் கேள்வியை மிகவிரிவாக அலசியிருக்கிறார்.

ஆண்ட்ரூவின் கூற்றுப்படியே பார்த்தால், 1947, அக் 27 அன்றுகாலை 9 மணிக்கு . இந்திய ராணுவம் காஷ்மீர் மன்னர் கேட்டுக்கொண்டதன் பேரில் காஷ்மீரில் கால்பதித்தது . இந்தியாவுடன் இணைவது குறித்த ஒப்பந்தம் அதற்கு முன்பு கையெழுத்தாகவில்லை. அநேகமாக சிலமணி நேரங்கள் கழித்து தான் கையெழுத்தாகி இருக்க வேண்டும். ஆனால், அக்-26-லேயே கையெழுத்தானதாக தேதியை_திருத்தி எழுதிவிட்டார்கள் என சொல்கிறார். ஒரு வகையில் இந்திய ராணுவம் அக்-27-ல் கால்பதித்தாலும் அக்-28 அன்று தான் இந்திய துப்பாக்கியிலிருந்து முதல் தோட்டா சீறிப்பாய்ந்திருக்கிறது. அதாவது ஒப்பந்தம் முறையாக கையெழுத்தான பின்பு தான் அது தாக்குதலை தொடங்கியிருக்கிறது . எனினும் இந்தியராணுவம் எப்போது காஷ்மீரில் கால்பதித்தது என்ற கேள்வி முக்கியமான ஒன்று தான்.

அக்-24 லேயே மஹா ராஜா தன் கைக்குக்கிடைத்த ஒரு காகிதத்தில் அரசாங்க முத்இந்தியராணுவம் எப்போது காஷ்மீரில் கால்பதித்ததுதிரையிட்டு கையெழுத்தும்போட்டு, இணைப்புக்கு சம்மதம், ராணுவ உதவிதாருங்கள் என ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் . அதைப் பற்றி அக் 24-ல் நேரு, வானொலியில் ஆற்றிய உரையில் தெளிவாகக்குறிப்பிட்டும் இருக்கிறார். இருப்பினும் , இந்திய அரசு, சம்ஸ்தானங்களின் இணைப்புதொடர்பாக தயாரித்த அதிகார பூர்வ விண்ணப்பத்தில் மன்னர் கையெழுத்துபோட்ட தேதிதான் சந்தேகத்துக்குரியது என ஆண்ட்ரூ தெரிவிக்கிறார். அந்தவகையில் பார்க்கும்போது காஷ்மீரில் இந்தியராணுவம் முதலில் கால்பதித்த விஷயம் தர்க்கரீதியில் விவாதத்துக்கு உரியது. தர்மத்தின் படி எந்த குழப்பமும் அதில் இல்லை.

இன்று பின்லேடனைப் பிடிக்க அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானில் இறங்கியதை அத்து மீறல் என சொல்லமுடியும். ஒரு வகையில் இலங்கையில் இந்திய ராணுவம் உணவுப்பொட்டலங்கள் போட்ட நிகழ்வைக்கூட அத்து மீறல் என சொல்ல முடியும். ஏனென்றால், அந்த சம்பவ்ங்களுக்கு பிறகும் அந்தநாடுகள் அந்தச்செயலுக்கு அனுமதி கொடுத்ததாக எங்கும் கையெழுத்து இடவில்லை. எனவே, அது நிச்சயமாக அத்து மீறல்தான். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் உண்மை அதுவல்ல என்பது நூலாசிரியர் தொகுத்து தந்திருக்கும் ஆவணங்களிலிருந்து தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது.

அடுத்ததாக முன் வைக்கப்படும் அடுத்த குற்றச்சாட்டு என்னவெனில் , காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் முடிவெடுக்க படும் என உத்தர வாதம் தரப்பட்டது. ஆனால், அதுபின்னர் மேற்கொள்ளப்பட வில்லை என்பது தான்.

இந்த நூலுக்கு வெளியிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து பார்த்தால் இந்தவிஷயம் பற்றிய முழுமையான சித்திரம் நமக்கு கிடைக்கும். புதிதாக பதவிபெற்ற ஷேக் அப்துல்லா அடுத்து நடந்ததேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் இந்தியாவுடன் சேர்ந்தது சரி என சொல்லியவர் தான். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள அவரது கட்சிக்கு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் எனில் இந்தியாவுடன் சேர்ந்ததை அவர்கள் ஏகமனதாக ஏற்று கொண்டிருகிறார்கள் என்றுதானே அர்த்தம்.

அதோடு மக்களால் தேர்ந்தெடுத்த அந்த அரசு சட்ட சபையில் இந்தியாவுடன் காஷ்மீர்சேர்ந்ததை அங்கீகரித்து ஒருதீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த வகையில் காஷ்மீர் யாருடன் சேரவேண்டும் என்ற பெயரில் தனி வாக்கெடுப்பு நடக்கவில்லையே தவிர அந்தவிஷயத்துக்கு ஆதரவான மன நிலையில்தான் மக்களும் அவர்களது தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதே புலனாகிறது.

அதாவது, காஷ்மீருக்குள் புகுந்த பழங்குடி கூட்டத்தினர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்று, பெண்களை பாலியல் பலாத்காரம்செய்து, கைக்கு கிடைத்ததை யெல்லாம் சுருட்டி கொண்டு ஓடவே செய்திருக்கிறார்கள். இந்ததாக்குதலில் ஐரோப்பியர்களையும், ஏன், முஸ்லீம்களையும் கூட அவர்கள் விட்டுவைக்க வில்லை. இதிலிருந்து உண்மையில் ஒருவர் என்ன முடிவுக்கு வர வேண்டும் எனில் , காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதோ முஸ்லீம் சகோதரகளுக்கான புனிதப்போரை நடத்துவதோ அவர்களது நோக்கமல்ல. அது ஒரு காட்டு மிராண்டி கூட்டத்தினரின் கொள்ளையடிப்பு நிகழ்வுமட்டுமே. முழுவிரக்தி அடைந்த ஒரு தலைவரின் தாங்கமுடியாத கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே.

இதற்க்கான வலுவான ஆதாரம் இந்த நூலிலேயே இருக்கிறது. ஜின்னாவின் டான் பத்திரிகை அக்டோபர் 24-ல் வெளியிட்ட ஒருகட்டுரையின் தலைப்பு: காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது முடிவாகிப்போன ஒரு தீர்மானம்.

அதாவது மஹா ராஜா அரசாங்க முத்திரையிட்டு இணைப்பு ஒப்பந்தத்துக்கு சம்மதம் என்று எழுதிக்கொடுத்த அன்று இந்த ஜின்னாவின் கட்டுரை வெளியாகியுள்ளது . காஷ்மீர் கைவிட்டுப்போனது உறுதியாகி விட்ட நிலையில் ஏற்பட்டகோபத்தை இப்படியான காட்டுமிராண்டி தாக்குதல் மூலமாக பாகிஸ்தான் வெளிப்படுத்தியிருஇந்தியாக்கிறது என்பதைத் தான் இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

அதுபோன்று , காஷ்மீரின் மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் சேர பலமுயற்சிகள் எடுத்து வந்திருக்கிறார் என்பதும் ஷேக்_அப்துல்லாவை முன்னிலைப்படுத்து வதை மட்டுமே எதிர்க்கிறார் என்பதும் நூலாசிரியர் தொகுத்து தந்திருக்கும் ஆவணங்களிலிருந்து தெளிவாக புரியும் நிலையிலும் மன்னரின் ஷேக்_அப்துல்லா தொடர்பான மனக் கசப்பை இந்தியாவுடனான மனக் கசப்பாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.

நன்றி ;மகாதேவன்

Leave a Reply