தோஷங்களைக்  களையும்  அம்மன்குடி   மகிஷாசுர மர்தினி  ஆலயமதிருவிடை மருதூர் மற்றும் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற வற்றிற்கு இடையே உள்ளது அம்மன் குடி என்ற ஆலயம்;. கும்பகோணத்தில் இருந்து சுமார் 20கல் தொலைவிலும் மற்றும் திருவிடை மருதூரில் இருந்து சுமார் ஒரு கல் தொலைவில் உள்ளது அம்மன் குடி கிராமம் . இந்த கிராமத்தில் உள்ளஅம்மன் ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்டது. இராஜராஜ சோழனின் படைத்

தளபதியாக இருந்த கிருஷ்ண ராய பிரும்ம ராயன் என்பவர் இதை நிறுவியதாக அங்குள்ள கல்வெட்டுச் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. அந்த ஆலயம் தோன்றியதைப் பற்றி கூறப்படும் வாய் மொழி; கதை இது.

மகிஷா சுர மர்தினி தேவியின் கதை

மகிஷா சுர மர்தினி;, பார்வதியின் அவதாரம். ஒரு முறை தேவேந்திரனான இந்திரனை தோற்கடித்து ஆட்சி செய்து வந்த மகிஷா என்ற அசுரன் தன்னைத் தவிற வேறு எவரையும் வணங்கக் கூடாது என்ற எண்ணத்துடன் அனைத்து தெய்வங்களின் பக்தர்களையும், தேவர்களையும்; கொன்றுகுவித்து வரத்துவங்கினான். உலகில் யாகங்களும், பூஜைகளும் நின்றன. மகிஷாசுரனைக் கண்டு பயந்து போய் அனைத்து தேவர்கள் மலைகளில் இருந்த குகைகளிலும் மறைவிடங்களிலும் சென்றுவாழத் துவங்கினர்.

ஒரு முறை சிவபெருமானும், விஷ்ணுவும் அமர்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டு இருக்கையில் மகிஷாசுரனின் அட்டகாசம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்க இருவருடைய முகங்களும் கோபத்தால் சிவந்து போனது. அவர்களுடைய முகத்தில் இருந்து வெளிவந்த கோபக் கனலில் இருந்து ஒரு அழகிய பெண் தோன்றினாள். சிவன் வடிவமாக முகமும்;, விஷ்ணுவின் அம்சமாக பல கைகளையும், கால்கள் பிரும்மாவையும், தலை எமனாகவும், இடுப்பு பூமித் தாயாகவும் கொண்ட தோற்றம் அளித்த அவளே அந்த அசுரன் மகிஷாசுரனை வதம் செய்யவந்தவள் என்பதைப் புரிந்து கொண்ட அனைத்து கடவுட்களும் அவளுக்கு தங்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்களையும் சக்தியையும் தந்தனர். இமயமலையின் மன்னன் அவளுக்கு தன்னிடம் இருந்த ஒரு சிங்கத்தைக் கொடுத்தார். அ ந்த சிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு அந்த தேவி மகிஷாசுரனை அழிக்கக் கிளம்பினாள்.

கடுமையான யுத்தம் நடந்து முடிந்தது. யுத்தத்தில் மகிஷாசுரனுடைய படைத் தளபதிகள் அழிந்தனர். முதலில் காளை வடிவில் வந்த மகிஷாசுரன் பல் வேறு வடிவங்களை எடுத்தபடி தன்னைக் கொல்ல தேவி எய்த ஆயுதங்களில் இருந்து தப்பினாலும் கடைசியாக மீண்டும் அவன் காளை உருவில் வந்த பொழுது அவனைக் கீழே தள்ளி தனது இடது காலினால் பூமியில் அவனை அழுத்திப் பிடித்து திரிசூலாயுதத்தினால் அவனைக் கொன்றாள். அதனால் அந்த தேவியின் பெயர் மகிஷாசுரனை அழித்த மகிஷாசுரமர்தினியாயிற்று.

மகிஷாசுரன் அசுரன் என்றாலும் அவன் சிவபக்தன். ஆகவே அவன் தன்னுடைய கழுத்தில் சிவலிங்கம் ஒன்றை அணிந்திருந்து சிவ பெருமானிடம் பலவரங்கள் பெற்று இருந்தான். அவனைக் கொன்ற பொழுதும் அவன் கழுத்தில் சிவலிங்க மாலையை அணிந்து கொண்டு இருந்ததினால், அவனைக் கொன்ற பாவத்திற்கு தேவிக்கு சிவதோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என சிவ பெருமானிடமே அவள் கேட்க அவள் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு 12 வருடம் தவம் இருக்க வேண்டும். அந்த தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அதன் கரையில் ஒரு வினாயகரை பிரதிஷ்டை செய்து விட்டு தவத்தை மேற்கொள்ள வேண்டும் என சிவன் கூறினார்.

ஆகவே தனக்கு ஏற்பட்ட தோஷம் விலக வேண்டும் என்பதினால் மகிஷாசுரமர்தினி பூமியில் இருந்த அம்மன் குடிக்கு வந்து அங்கு இருந்த காவிரி ஆற்றில் குளித்துவிட்டு, கரையில் தான் செய்ய இருந்த தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஒரு வினாயகரையும் பிரதிஷ்டை செய்து விட்டு 12 வருடங்கள் தவத்தில் இருந்தாள். பன்னிரண்டு வருடங்கள் கழிந்தன. அவளுடைய தவத்தை மெச்சி கைலாயத்தில் இருந்து வந்த சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளுடைய தோஷங்கள் அனைத்தும் விலகி விட்டன என்று கூறி விட்டு மறைந்தார்.அதன் விளைவாக அவளுக்கு அந்த இடத்தில் இராஜராஜசோழனின் படைதளபதி தன் கனவில் வந்த ஆணைப்படி எட்டு கைகளைக் கொண்ட அவளுடைய சிலை ஒன்றை கிழக்குநோக்கி அமர்ந்திருக்கும் வகையில் ஒரு ஆலயம்படைத்தான். அதுவே அம்மன்குடி ஆலயம் எனப்பட்டது.அந்த இடத்தில் வந்து இராஜராஜ சோழனின் படை தளபதி ஆலயத்தை அமைத்ததினால் அந்த இடத்திற்கு இராஜ ராஜேஸ்வரம், தேவித போவனம் என்ற பெயர்களும் ஏற்பட்டன.

அந்த நதியில் அவள் அசுரனைக் கொன்ற வாளினை கழுவி சுத்தம் செய்ததினால் தோஷத்தைப் போக்கிய நதித் தீர்த்தம் பாப விமோசன ஷேத்திரமாக கருதப்பட்டு, நதியில் குளித்தால் பாபவி மோசனம் பெறலாம் என்ற நம்பிக்கைள் தோன்றின. அது மட்டும் அல்ல திருமணம் ஆகாத அவள் சிவபெருமானின் பிள்ளையான வினாயகரையே தனக்குக் காவலாக வைத்திருந்ததினால் அந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் பிள்ளை பிறக்காதவர்களுக்கும் குழந்தைப் பேறு கிடைக்கும் எனவும், மூச்சை அடக்கிக் கொண்டு தபம் இருந்ததினால் அவளை அந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் மூச்சுவிடக் கஷ்டம் தரும் ஆஸ்துமா போன்ற வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கைகள் தோன்றின

நன்றி சாந்திப்பிரியா

Tags:

Leave a Reply