காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்ய போவதாக நாம்-தமிழர் இயக்க கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார் .

அதைதொடர்ந்து நாம் தமிழர் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் பொது கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் ராதாபுரம் தொகுதி காங்கிரஸ்-வேட்பாளர் வேல்துரையை எதிர்த்து அவர் பேசியதாவது

வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கம்மிட்ட நெல்லை சீமையின் புலித்தேவர் பிறந்த மண்ணிலிருந்து காங்கிரசை வீழ்த்த திசையன்விளையில் அரசியல்யுத்தம் தொடங்கியுள்ளோம்.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த-காங்கிரஸ் இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல. வஉ.சிதம்பரனாரை அவமானப்படுத்திய கட்சி காங்கிரஸ் கட்சி. காமராஜரை கைதுசெய்ய சொன்ன கட்சி காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் தோல்வி, நாம் தமிழர் கட்சியின் வெற்றி], 110கோடி இந்தியர்கள் இருக்கும் பொது இத்தாலியிலிருந்து வந்த சோனியா ஆட்சி செய்கிறார் என்று பேசினார்

Leave a Reply