அருந்ததி ராய் புவனேஸ்வரத்தில் ஒருகூட்டத்தில் கலந்து கொள்வதற்க்காக வந்தார் அவரை எதிர்த்து அங்குகூடியிருந்த ஏராளமான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதிலபாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் கோஷமிட்டனர். அவருக்கு எதிராகக் கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம்செயதனர் காஷ்மீர் குறித்த அருந்ததிராய் கருத்து தேசவிரோதமானது என தெரிவிக்கும் பதாகைகளை வைத்திருந்தனர்.

இதை அடுத்து கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம்-மோதலாக மாறியது. கம்புகளாலும், கற்களாலும், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 5 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்

Leave a Reply