"ஒருவனிடமிருந்து ஒன்றைத் திருட வேண்டுமென்றால், (அவனை ஏமாற்ற வேண்டுமென்றால்) அவனிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது அவனது ஆசையைத் தூண்டிவிட வேண்டும்"  என்கிறது தற்போது வெளிவந்த ஒரு படத்தின் வசனம். இந்த வசனம் எதற்கு பொருந்துகிறதோ!, அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைக்கு சரியாகவே பொருந்துகிறது.

 

சமிபத்தில் அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி; 100 யூனிட் வரை இலவச மின்சாரம்; இலவச செல்போன், பெண்களுக்கு 50 சதவீத விலையில் இருசக்கர வாகனம் என்று ஆசையை  தூண்டும் விசயங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன.

 

இலவசங்கள் தவிர்த்து அறிவிக்கப்பட்ட மற்றவை எல்லாம் இவர்களது 5-ந்து ஆண்டு ஆட்சி காலத்தில் நிறைவேற்றியிருக்க கூடிய விசயங்களே. உதாரணத்துக்கு பால் விலையை 25-ந்து ரூபாய் வரை குறைப்போம் என்கிறார்கள். அதை ரூ.40 வரை ஏற்றியவர்கள் இவர்களே. நதிகளை இணைப்போம் என்கிறார்கள். ஆனால் 2011 தேர்தல் அறிக்கையிலையே இதை ஒருமுறை கூறி விட்டார்கள். சென்னையை சுற்றியுள்ள நதிகளைக் கூட இவர்கள் ஒழுங்காக இணைக்க வில்லை, பராமரிக்க வில்லை. அதை சரியாக பராமரித்து இருந்தாலே தற்போதைய பெரும் வெள்ளத்தை தடுத்திருக்கலாம்.

 

மின்சார உற்பத்தியை பெருக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சீரான , தரமான மின்சார விநியோகத்துக்கு வழிவகுக்கும் மத்திய அரசின் உதேய் திட்டத்தை புறக்கணித்து அதன் பலன் தமிழர்களுக்கு கிடைக்காமல் செய்தவர்கள் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக் தருவேன் என்கிறார்கள்.

மேலும் கடந்த 2011 ஆண்டைய தேர்தல் அறிக்கையில் வெறும் 20% சதத்தை  மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.  அதிலும், இருபது லிட்டர் குடிநீர், முதியோர் பஸ் பாஸ் எல்லாம், ஆட்சி முடிய சில மாதங்கள் உள்ள நிலையில், சென்னையில் மட்டும் சில பேருக்கு பெயரளவில் அளிக்கப்பட்டது…

இந்த ஐந்தாண்டுகளில் ஏறக்குறைய 80 ஆயிரம் கோடி மதிப்பிலான 300 க்கும் மேற்பட்ட அறிவிப்புக்களை விதி எண்  110 கீழ் சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், இதில் ஒரு 15% சதவீத திட்டங்கள் கூட நிறைவேற்றப்படவில்லை.

இவர்களது ஊதாரித்தனமான நிர்வாகத்தாலும், இலவச திட்டங்களாலும், ஊழல்களாலும் தமிழகத்தின் கடன் சுமை ரூ 4 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. மேலும் இவர்களது இலவச திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இரண்டு லட்சம் கோடி வரை தேவைப்படும். அப்படி என்றால் தமிழகத்தின் கடன் சுமை ரூ 6 லட்சம் கோடியை தொட்டுவிடும்.

இந்த ஐந்து ஆண்டுகளில், ரேஷன் கார்டைகூட புதிதாக கொடுக்க முடியாமல், வருடாவருடம் வெறும் உள்தாள் ஒட்டி ஒட்டியே ஒப்பேற்றியவர்கள்.  சட்டசபை நிகழ்சிகளை நேரடியாக லைவ் ரிலே செய்ய ரூ 10 கோடி செலவாகும் அந்த அளவு செலவு செய்ய அரசிடம் வழியில்லை என்றவர்கள் எப்படி இலவச திட்டங்களை நிறைவேற்றுவார்கள்.

மது விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தானே இந்த இலவசங்கள் கொடுக்கபடுகின்றன.. அப்படியானால், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு கொண்டுவருவோம் என்ற வாக்குறுதி வெறும் வாய்ச்சாடல் தானா?.

 

எனவே வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவர்களது ஆசையை தூண்டும் இலவச திட்டங்களுக்கு சஞ்சலப்பட்டு வாக்களிப்பீர்களே என்றால், ஓவ்வொரு தமிழனும் ரூ 1 லட்சம் கடன் சுமையை இவர்களது இலவச பொருட்களுடன்  சேர்த்து மது மயக்கத்திலேயே சுமக்க வேண்டி வரும்…..

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply