ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜிநாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டதால் ஆளுநர் மாளிகைகு சென்று ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சங்கர நாராயணனிடம் அசோக் சவாண் அளித்தார், ஆளுநர் அவரது ராஜிநாமாவை ஏற்று கொண்டார் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை பதவியில் தொடரு மாறு சவாணை கேட்டு கொண்டார்.

இதற்கிடையில் மற்ற அரசியல்கட்சிகள், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் ஈடு பட்ட அனைத்து மாநில அமைச்சர்களும்  பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளன

Leave a Reply