இந்திய மக்களை பாதுகாப்பதே அரசின் கடமை பங்களாதேசிகளை அல்ல பரதம் விருந்தாளியாக வ்நதோரை , விருந்தோம்பி , பிழைக்க இடம் தந்து வாழவைக்கும் பழம்பெருமைகள் கொண்ட தேசம் . அதேபோன்று வாழவந்தவர்களால் வரண்டபட்டு, சுரண்டப்பட்டு ,வஞ்சிக்கப்பட்டு, இறுதியில் துண்டாடப்பட்ட வரலாற்று வடுக்களை தன்னகத்தே கொண்டு, இன்றும் பலதரப்பட்ட மக்களை அரவணைத்து செல்லும் தேசமும் கூட .

இதற்க்கு வரலாற்று ஆதாரங்கள் தேவையில்லை அகழ்வாரய்சியும் தேவையில்லை இந்திய பிரிவினையும் , காஷ்மீர் பிரச்சனையும் , அஸ்ஸாம் இன கலவரமுமே போதும். அஸ்ஸாமில் கடந்த 20 ம் தேதி நான்கு போடோ பழங்குடியின போராளிகளை நடுரோட்டில் அஸ்ஸாம் முஸ்லீம் சிறுபான்மை மாணவர்கள் வெட்டி சாய்த்ததனர் . இதனை தொடர்ந்து அஸ்ஸாமில் போடோ பழங்குடியினருக்கும் பங்களாதேஷிலிருந்து குடியேறிய சிறுபான்மையினருக்கும் இடையேயான இன கலவரம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்தது . இதில் 58க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் , 4 லட்சம் பேர் மாநிலத்துக்குள்ளேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் . இதை இன கலவரம் என்று கூறுவதை விட அப்பாவி பூர்விக போடோ பழங்குடியினர் மீது திணிக்கப்பட்ட மறைமுக போர் என்றே கூறலாம் , இதன் சூத்திரதாரி பங்களாதேசை சேர்ந்த ஹுஜி (HUJI), பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புகளே. இதற்க்கு அடித்தளம் அமைத்தவர்கள் சிறுபான்மையினர் ஓட்டுக்காக நாக்கை தொங்கபோட்டு அலையும் ஈன அரசியல்வாதிகளே.

தங்களால் இந்தியாவுடன் இனைந்து வாழ முடியாது தனி நாடே ஒரே தீர்வு என தனி குடித்தனம் சென்றவர்களே இந்த பாகிஸ்தான், கிழக்கு பாகிஷ்தான் (இன்றைய பங்களாதேஷ்) போன்ற நாடுகள். அன்று வீராப்புடன் சென்றவர்களால் கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரம் போன்ற துறைகளில் வீழ்ந்து பாரததேசத்துக்குள் திருட்டுத்தனமாக மீண்டும் ஊடுருவதான் முடிந்தது . தனித்து வாழமுடியவில்லை .

இன்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் முழுவது 1970 லிருந்து 1 கோடியே 20 லட்சம் பேர்   பங்களாதேசிகளை  திருட்டுத்தனமாக குடியேறியுள்ளனர் . இதில் அஸ்ஸாமில் பங்களாதேசிகளின் குடியேற்றம் என்பது மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாக நடைபெற்று வருகிறது , சிறுபான்மையினர் கொஞ்சம் அதிகமாக இருக்கும் பகுதிகளை தேர்ந்தெடுப்பது, அங்கு பங்களாதேசிகள் குடியேற உதவுவது, இவர்களுக்கு திருட்டு ரேஷன் கார்ட் , வாக்காளர் அட்டை , பாஸ்போர்ட் உள்ளிட்ட சகலத்தையும் சிறுபான்மையினர் ஓட்டுக்காக அலையும் உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் பெற்று விடுவது , பிறகு இவர்கள் கூலி மற்றும் விவசாய வேலை மட்டுமே தெரிந்த அப்பாவி பழங்குடியினரிடமிருந்து அவர்களது நிலத்தை வாங்கி அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அந்த பகுதியை விட்டு விரட்டிவிடுவது , இது நமது தேசத்தின் ஒரு பகுதியை பங்களாதேசுக்கு மறைமுகமாக விற்கும் செயலே, மேலும் பூர்வ குடிகளான போடோ உள்ளிட்ட பழங்குடியினரை இன அழிப்பு செய்வதற்க்கான ஒரு திட்டமிட்ட முயற்சியே! .

அசாமில் இருக்கும் 126 சட்டசபை தொகுதிகளில் 56 தொகுதிகள் பங்களாதேசிகளின் உடுருவல் காரணமாக சிறுபான்மையினரின் செல்வாக்கை பெற்றுவிட்டது. அதாவது 1994 இல் இருந்து 1997 வரை 57 சட்டசபை தொகுதிகளில் வாக்களர்களின் எண்ணிக்கை 20 % அதிகரித்துள்ளது , நமது தேசிய சரசரியே வெறும் 7% தான்.

1947 ம் ஆண்டு இந்தியாவிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ் ) பிரிந்த போது பங்களாதேசில் 27% மாக இருந்த இந்துக்கள் 1971ம் ஆண்டு 14% மாக குறைந்தனர். மேலும் 1991ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10% க்கும் கீழாக குறைந்துவிட்டனர். அதே நேரத்தில் இந்தியாவின் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வருடம் வருடம் பங்களாதேஷிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது, அப்படியென்றால் எங்கே அடக்குமுறை இருக்கின்றது? , எங்கே ஒடுக்குமுறை இருக்கின்றது?. பங்களாதேசில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்களின் மீது அடக்குமுறை ஏவபடுகிரதா? இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரான பங்களாதேஷ் முஸ்லிம்கள் மீது அடக்குமுறை ஏவபடுகிரதா?.

இதே போன்றுதான் இந்துக்களின் புண்ணிய பூமியாகவும் , சைவத்தின் ஆதாரமாகவும் இருந்த   பங்களாதேசிகளை  காஷ்மீர் படிப்படியாக இஸ்லாம் மயமக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு, நேருவின்தவறான கொளகையினால் பாகிஷ்தான் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்துக்கு சென்றது 1987ல் இருந்து படிப்படியாக, அம்மண்ணின் மைந்தர்களான பண்டிட் சமூகத்தினர் பல லட்சம் பேர் அங்கிருந்து விரட்டப்பட்டனர். அகதிகளாக வெளியேறிய பண்டிட்கள், தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். சொந்த தேசத்திலேயே அவர்கள் அகதியாக்க பட்டுவிட்டனர்.

இந்த காங்கிரஸ் அரசாங்கம் சிறுபான்மையினர் ஓட்டுக்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்து விட்டது . இந்திய மக்களை பாதுகாப்பதே அரசின் கடமை பங்களாதேசிகளை அல்ல.

தமிழ் தாமரை  VM . வெங்கடேஷ்

Leave a Reply