நாடுமுழுவதும் அடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவத்துக்காக ஆயுஷ் அமைச்சகம் செயல்பட்டுவருகிறது. இந்த அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரமர் நரேந்திர மோடி, பாரம்பரிய மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்கு பாடுபட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார். ஆயுஷ்துறையில் புகழ்பெற்றவர்களின் சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டார். அரியானா மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ள 10 ஆயுஷ் நலவாழ்வு மையங்களையும் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசியதாவது:

நாடுமுழுவதும் 12 ஆயிரம் ஆயுஷ் நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக நடப்பாண்டில் 4 ஆயிரம் ஆயுஷ் நிலையங்கள் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுவருகின்றன.

ஒரே தேசம், ஒரே வரி மற்றும் ஒரேரேஷன் அட்டையின் அடிப்படையில் அனைவருக்கும் ஒரே மருத்துவசேவை எனும் நோக்கத்தில் ஆயுஷ் திட்டத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதுமட்டுமல்லாமல் 1.5 லட்சம் சுகாதார நிலையங்கள் துவங்கப்பட உள்ளன.

ஆயுஷ் திட்டத்தில் பழமையான மருத்துவமுறையில் புதிய தொழில் நுட்பங்களை பின்பற்ற வேண்டியது அவசிமாகிறது. இதற்கு தேவையான நபர்களை இணைத்து செயல்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரிவித்தார்.

Comments are closed.