மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் அவரது அறையில் மூன்று இளைஞர்களால் கடுமையாக தாக்கபட்டார்.அந்த மூன்று இளைஞர்களும் பகத் சிங் கிராந்தி_சேனா எனும் சிறிய அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது .

இன்று பிற்பகல் பிரசாந்த்பூஷணின் அறைக்குள் புகுந்த அந்த

மூன்று பேறும் அவரை கடுமையாக தாக்கினர். இதைதொடர்ந்து பூஷண் ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பிரசாந்த்பூஷண் மீதான தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுபேற்றுள்ளது.தேசிய ஒருமைபாட்டுக்கு எதிரான பிரசாந்த்பூஷணின் கருத்துக்காக அவர்_மீது தாக்குதல் மேற்கொண்டோம் என்று பகத்சிங் கிராந்தி சேனாவின் தஜீந்தர் பால்சிங் பக்கா என்பவர் கூறினார் .

{qtube vid:=8_JA0ZzcflM}

Leave a Reply