மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு ஊழலுக்கு எதிரானது என்பதற்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா வழக்கே சிறந்த உதாரணம் என கட்சி தெரிவித்துள்ளது.

கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக மும்பை நீதி மன்றம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து  கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித்பத்ரா தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியின் போது மல்லையாவுக்கு அந்த அரசின் ஆதரவு இருந்தது. காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்த மல்லையா, தனக்குகிடைத்த உதவிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்ததுடன், மேலும் கடன்பெற உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து மல்லையாவுக்கு தேவையான உதவிகளை செய்ய மன்மோகன்சிங் தனது செயலருக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் வங்கிக் கடன்களை திருப்பிச்செலுத்தாத நிலையிலும், அவருக்கு மேற்கொண்டு கடன் வழங்கப்பட்டது. அத்துடன், அவர் திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் தொகை குறைத்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவில் ரூ.9,000 கோடி மோசடி செய்துவிட்டு மல்லையா வெளியநாடு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் போன்ற தலைமறைவு நிதி மோசடியாளர்களை நீதிமன்றத்தின் முன்னாள் கொண்டுவந்து நிறுத்துவதை உறுதிசெய்யும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை கொண்டுவந்தது.

தற்போது மல்லையா அந்தசட்டத்தின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது, ஊழலுக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். காங்கிரஸ் அரசு மோசடியாளர்களுக்கு உதவுகிறது. நாங்கள் மோசடியாளர்களை நீதியின்முன்பாக கொண்டு வருகிறோம்.

இதுவே எங்களுக்கும், காங்கிரஸுக்கும் இடையேயான வித்தியாசமாகும் என்று சம்பித் பத்ரா கூறினார்.

Leave a Reply