அரியானாவில் இன்று நடைபெறும் கட்டார் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி , பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் , பா.ஜ.க ஆளும் மாநில முதல்மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்..

அரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க., 47 இடங்களில் வெற்றிபெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. பின்னர் நடந்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் மனோகர் லால் கட்டார், முதல்–மந்திரியாக தேர்வு செய்யப் பட்டார்.

இதைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பு விழா இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இதற்காக பஞ்சகு லாவில் அமைந்துள்ள ஹூடா மைதானத்தில், பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் , பா.ஜ.க ஆளும் மாநில முதல்மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். மேலும் பஞ்சாப் முதல்மந்திரி பிரகாஷ்சிங் பாதல், அரியானாவில் முதல்–மந்திரி பதவியில் இருந்து விடைபெறும் பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் விர்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply