சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாதொகுதியின் பாஜக. எம்.பி. முராரிலால்சிங் (62) புதன்கிழமை மரணமடைந்தார்.

மூளைப் பக்கவாதநோயால் பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவ மனையில் 5 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அதிகாலையில் அவருக்குதிடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முராரிலால் சிங்கின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான தேத்ரிகிராமத்தில் வியாழக் கிழமை நடைபெற உள்ளது.

இவருக்கு மனைவி மற்றும் ஒருமகனும், மகளும் உள்ளனர். மலைவாழ் மக்களுக்காக போராடிய முக்கிய தலைவரான முராரிலால்சிங், 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சியில் இணைந்தார். ம.பி., மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்த போது, 1980 இல் பாஜக. சார்பில் பில்கா சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர்.

பின்னர் பாஜக. மண்டலத் தலைவராக பொறுப்பேற்ற அவர், 1990 இல் சூரஜ்பூர் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டுவென்றார். பின்னர் 2009இல் சர்குஜா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு பாஜக. எம்பி.யானார். இவரது மறைவுக்கு மாநில பாஜக தலைவர் ராம்சேவக் பைக்ரா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply