சோனியா காந்தி மற்றும் அவரது கணவர் ராஜிவ் காந்தி இருவரும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி சோனியா காந்தியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விபரத்தை வெளிப்படுத்தி, அதை

இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான வழிமுறைகலை ஆய்வுசெய்ய பாரதிய ஜனதா ஒரு குழுவை அமைத்திருந்தது .

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் சோனியா மற்றும் ராஜிவ் காந்தி பெயர்கள் இருப்பதாக அந்தக் குழுவின் அறிக்கை குற்றம் சாட்டியது .

சோனியா காந்தி அந்த குற்றசாட்டை மறுத்து அத்வானிக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில் பாரதிய ஜனதா குழுவின் அறிக்கையில் சோனியா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி பெயர்கள் இடம்பெற்றிருந்ததற்கு வருத்தம் தெரிவித்து சோனியாவுக்கு அத்வானி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply