கடந்த 60 ஆண்டுகளாக ஊழல் அரசியல்வாதிகள், நேர்மையற்ற தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி இந்தியபணத்தை சுவிட்சர்லாந்து,லக்சிம்பர்க்,லீச்டென்சிடின்,சன்னல் தீவுகள்,பஹமா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முறைகேடாக போட்டுவைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும்,இந்த பணம் இந்தியாவிற்க்கு திரும்ப கொண்டுவரப்படவேண்டும் என்கிற வெகுஜன

கோரிக்கையும் சமீப காலம்மாக தீவிரம்மடைந்துள்ளது.

2009 தேர்தலின் போது பாரத பெருந்தலைவர் அத்வானி அவ்ர்கள் இந்தப்பணம் பா.ஜ ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் இந்தியாவிற்க்கு கொண்டுவரப்படும் என்று சொன்னது தேர்தல் களத்தை சூடாக்கியது.இதனை எதிர்த்த காங்கிரஸ்,தே.ஜ.கூ.ஆட்சியின்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிகேள்வி எழுப்பிய கங்கிரஸ் பின்பு மக்களின் மனநிலையை எண்ணி ஜ.மு.கூ ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் இந்திய கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவோம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்து 630 நாட்கள் தாண்டியும் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் உருப்படியாக எடுக்கவில்லை மாறாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லீச்டென்சிடின் வங்கியில் கருப்பு பணம் வைத்து உள்ளவர்களின் பட்டியல் தங்கள் வசம் உள்ளதாகவும் அதை பகிரங்கம்மாக வெளியிடமுடியாது என உறுதியாக கூறுகிறார்.காங்கிரஸ் கட்சியின் நிலையில் ஏன் இந்த தடுமாற்றம்?

பா.ஜ.க.ஆட்சியின் போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் உலக நாடுகளில் உள்ள கருப்பு பணத்தை தங்கள் ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பாதுகாத்து உலக கறுப்பு பண முதலைகளுக்கு பாதுகாப்பை அளித்த்னர்.வங்கி கணக்குகள் ரகசிய கோட் மூலம் பராமரிக்கப்பட்டது.இதனால் உலக நாடுகள் எதுவும் உரிய தகவலை பெற முடியாத நிலை இருந்தது..

இந்த நிலை அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு மாறத்துவங்கியது.ஏனெனில் இந்த தாக்குத்லுக்கு பயன்படுத்துப்ப்டட பணம் கறுப்பு பணமே என தெரியவந்ததால் கறுப்பு பணத்தை தங்கள் நாட்டில் வைத்துள்ள நாடுகள் இதில் வெளீப்படைத்தன்மையை கடைபிடிக்க நிர்பந்திக்கப்பட்டன.2001 அக்டோபர் மாதம் தேச பக்தி சட்டம் கொண்டுவந்து அதன் மூலம் அமெரிக்காவில் கிளையில்லாத அல்லது கிளை வங்கியில்லாத வங்கிகளின் மூலம் நிதி நிறுவனங்கள் வர்த்தக தொடர்பு வைப்பதை தடை செய்தது.ஏனைய நாடுகளும் இதை போன்ற சட்டத்தை தங்கள் நாடுகளில் கொண்டு வந்தன.மேலும் அமெரிக்க.ஐரோப்பிய, நாட்டு மக்கள் தங்கள் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதற்க்கு காரணம் தங்கள் பணம் கறுப்பு பணம்மாக மாறி இந்த வங்கிகளில் வைக்கப்பட்டதுதான் என எண்ணி கோபம் கொண்டனர்.

இதனால் இந்நாடுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கின.2009 ஏப்ரல் மாதம் 2ம் தேதி லண்டனில் நடந்த ஜி 20 மாநாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்களை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,வரி ஏய்ப்பு மையங்களாக செயல்படும் நாடுகள் மீதும் கடுமையான நடவ்டிக்கை எடுக்கப்பட ஒப்புதல் அளிக்கப்ப்டடது.இந்த ஒப்பந்த்தில் இந்தியாவும் கையெழுத்திட்டது என்பதை அடிகோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்க்கான அமைப்பு OECD [organisation for economic co – operation and development] வரி ஏய்ப்பினை பற்றி கருத்து பரிமாற்றத்தை கடைபிடிக்காத 40 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.அதில் சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டின் போன்ற நாடுகளின் பெயர்களும் உள்ளது.இதனால் இந்த நாடுகள் மற்ற நாடுகளுடன் வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.வரி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வட்தற்க்காவும் அதனது வெளிப்ப்டையான தன்மைக்காவும் அமைக்கப்பட்ட OECD யின் சர்வதேச அமைப்பு 2000ல் துவக்கப்பட்டாலும் 2009க்கு பிறகு ஜி 20 நாடுகளின் முயற்ச்சியால் அது பல கட்ட மாற்றங்களை அடைந்து

இந்த அமைப்பில் ஜி 20 நாடுகள் உட்பட 95 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.2010 நவம்பர் சியோலில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் மாநாட்டில் இந்த அமைப்புக்கு மீண்டும் தங்களது ஆதரவு தெரிவிக்க்ப்பட்டதுடன்,வரி ஏய்ப்பு மையங்களாக செயல்படும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தயராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

2000 – 2008ல் வரி ஏய்ப்பை பற்றிய தகவல் பரிமாற்றம் வெறும் 70 ஒப்பந்தங்களே மேற்க்கொள்ளப்பட்டன அதுவே 2009 – 2010 மட்டும் 500 ஒப்பதங்ள் மேற்க்கொள்ளப்பட்டன.ஜி20 நாடுகளின் அழுத்தத்தின் காரணம்மாக சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டின் போன்ற நாடுகள் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களை பல நாடுகளுடன் ஏற்ப்படுத்திக்கொண்டன.இதன் மூலம் சர்வதேச அமைப்பின் கருப்பு பட்டியலிருந்து தங்கள் நாட்டின் பெயரை நீக்கி கொள்ள இந்த நாடுகள் முயற்ச்சிக்கின்றன.இவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாட்டிற்க்கு தேவையான தகவல்களை தர ரகசியம் ஒரு தடையாக இருக்காது என்று OECD ன் உலக அமைப்பு எதிர்பார்கிறது.

ஒப்பந்தங்கள் மூலம் இதுவரை ஜெர்மனி 24300 கோடியையும்,இத்தாலி 30000 கோடியையும் தங்கள் நாட்டிற்க்கு கொண்டு சென்று உள்ளனர்.விரைவில் இங்கிலாந்து 45000 கோடியையும்,கிரிஸ் 216000 கோடியையும் பெறும் என OECD யின் இணை செயலாள்ர் சியோலில் தெரிவித்து உள்ளார்.

OECD ன் 15 உறுப்பு நாடுகலில் ஓன்றான இந்தியா இதுவரை எந்த நாட்டோடும் ஓப்பந்தம் ஏற்ப்படுத்திக்கொள்ளவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.வரி தொடர்பான தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஓப்பந்தங்களை பல நாடுகளும் [570] மேற்க்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்தியா இதுவரை எந்தவிதம்மான ஓப்பந்தம்மும் ஏன் ஏற்ப்படுத்திக்கொள்ளவில்லை என்கின்ற கேள்வி ஓவ்வொருவர் மனதிலும் எழுவதில் ஆச்சர்யம் ஓன்றும் இல்லை.

2008 ல் ஜெர்மன் நாடு லீச்டென்சிடின் நாட்டிடம் தங்கள் நாட்டை சார்ந்த வரி ஏய்ப்பு செய்து,க்ருப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை கேட்டு பெற்றது.அந்த பட்டியலில் கவனக்குறைவாக இந்தியாவை சார்ந்த 50 பேரின் பட்டியலும் ஜெர்மனிக்கு அனுப்பபட்டது.மேற்ப்படி நபர்களின் விவரம் நம் நாடு கேட்காமலே நமக்கு கிடைத்துவிட்டது.இது லீச்டென்சிடின் நாட்டுடன் ஏற்ப்படுதிக்கொண்ட ஓப்பந்ததின் விளைவாக நமக்கு கிடைக்கவில்லை.ஆனால் இந்த பெயர் பட்டியலை வெளியிட அரசு மறுக்கிறது.ஏன் என நீதி மன்றம் கேட்டால் சர்வதேச ஓப்பந்தங்களின் விளைவாக வெளியிட இயலாது என சொல்கின்றனர்.இதை விட அப்பட்டம்மான பொய் வேறெதுவும் உண்டா?

சுவிட்சர்லாந்து வங்கியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ரூடால்ப் எல்மர் விக்கிலீக்ஸ் உரிமையாளர் அசாங்கேவிடம் 2000 கருப்பு பண முதலீட்டாளர்களின் கணக்கு விவரங்களை தந்துள்ளது இந்திய ஆட்சியளர்களை கொலை நடுங்க செய்துள்ளது.மேலும் ரூடால்ப் எல்மர் சுவிட்சர்லாந்து வங்கிகள் இந்தியாவில் முதலீட்டு மேலாளர்களை நியமித்து இந்திய பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் ஜெர்மனி தங்கள் வசம் இந்தியர்களின் கருப்பு பண விவரங்கள் அடங்கிய 4 பட்டியல்கள் தங்கள் வசம் உள்ளன எண்ட்தெரிவித்தும் இந்திய அரசு அதனை பெறுவதை பற்றி ஆர்வம் காட்டவில்லை. மத்திய காங்கிரஸ் அரசு கருப்பு பண விவகாரம் தொடர்பாக இம்மாதிரி செயல்படுவதன் நோக்கம் என்ன?

கடந்த டிசம்பர் 31ம் தேதி வருமானவரி இலாகாவின் மேல்முறையீடு ஆணையம் [ITAT] போபர்ஸ் பீரங்கி ஊழலில் சோனியாவின் உறவினர் குவாட்ரோக்கி கமிஷன் பெற்றதை உறுதி செய்துள்ளது.மேலும் 1991ல் சுவிட்சர்லாந்து நாட்டு மக்களில் 6ல் ஒருவர் படிக்கின்ற பொருளாதார பத்திரிக்கை ஒன்று ராஜீவின் மைனர் மகன் ராகுலின் பெயரில் ரூ10,000 கோடி டெப்பாசிட் செய்ததாக செய்தி ஒன்று வெளியிட்டது.இது தொடர்பாக ஏ.பி.நூரானியும் பத்திரிக்கையில் எழுதி இருக்கிறார்..கடந்த மாதம் இது தொடர்பாக குருமூர்த்தியும் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் இந்தப்பணம் தற்ப்போது 80,000 கோடியாக மாறி இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

டாக்டர்.சுப்பிரமனியசாமி ஸ்பெக்டரம் ஊழலில் சோனியாவின் தங்கை அனுஷ்காவுக்கு ரூ18,000 கோடியும்,நாடியாவுக்கு ரூ18,000 கோடியும் அவர்களீன் பங்காக சீன வங்கி ஒன்றின் மூலம்மாக எடுத்து செல்லப்பட்டதாக குற்றம்சாட்டி பிரதமருக்கே கடிதம் எழுதி இருக்கிறார்.இப்போது வாசகர்களுக்கு புரியும் கருப்பு பண விவகாரத்தில் ஏன் மத்திய அரசு இப்படி நடந்துக்கொள்கிறது என்று?.

நன்றி திரு .H.ராஜா State Vice President

Leave a Reply