வடகிழக்கு மாநிலமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என வதந்தி பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மொத்தமாக (GROUP) எஸ்எம்எஸ். அனுப்ப 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசாமில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ,மும்பை,புனே உள்ளிட்ட ஒருசில நகரங்களில் வசிக்கும் வட மாநில மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதைபோன்று பெங்களுரிலும் தாக்குதல் நடக்க கூடும் என வதந்தி பரவியதால்,சுமார் 15 ,000 க்கும் அதிகமான வட மாநிலத்தவர்கள் தங்கள்சொந்த ஊருக்கு ரயில் மூலம் புறப்பட்டனர். இதை தொடர்ந்து வதந்தி பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் அடுத்த 15 நாள்களுக்கு தொகுப்பு எஸ்எம்எஸ். மற்றும் எம்எம்எஸ். அனுப்ப மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதன் படி, ஒரே நேரத்தில் 5 எம்எம்எஸ்.-க்கு மேல் அனுப்ப முடியாது.

Tags:

Leave a Reply