காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்கின்றனர்.

ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் எப்படி 370 சட்டப்பிரிவு, 35 ஏ பிரிவுகளால் புறக்கணிக்கப் பட்டன என்பது தற்போது அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் உள்ள 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் அப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. வளர்ச்சி என்பதே காஷ்மீரில் இல்லாமல் இருந்தது.

காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உரியபொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படாதது வேதனை அளிக்கிறது. எங்களது அணுகுமுறை வித்தியாசமானது. இத்தனை ஆண்டுகளாக அங்கு அடக்கு முறைதான் மேலோங்கி இருந்தது. ஆனால் நாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக்கிறோம். ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் சிறந்த எதிர் காலத்தையே விரும்புகின்றனர்.

அதற்கு மேற்கண்ட இரு சட்டப் பிரிவுகளும் இடம் கொடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப் பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் புதிய ஆற்றல்கள் பயன்படுத்தப் படவில்லை. தற்போது பிபிஓ முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை, உணவு உற்பத்தி முதல் சுற்றுலாவரை, முதலீடு செய்து இந்த பகுதி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். கல்வி மற்றும் திறன் மேம்பாடும் வெளியே வரத்தொடங்கும்.

மக்கள் எத்தகைய வளர்ச்சியை விரும்பினார்களோ அத்தகையவளர்ச்சி கொண்டு வரப்படும் என்பதை ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். அவர்களது கனவு, லட்சியம் நிறைவேறும். 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் இத்தனை நாட்கள் மக்களை கட்டிப்போட்டிருந்தன. அந்த சங்கிலிகள் தற்போது அறுக்கப்பட்டுவிட்டன. இதனால் மக்கள் அடக்கு முறையை விட்டு விடுவிக்கப்பட்டுவிட்டனர். எனவே அவர்களது எதிர்காலத்தை அவர்களே அமைத்துகொள்ளலாம்.

370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் தொடரவேண்டும் என கோரும் எதிர்க்கட்சியினர், அதற்கான நியாயமான வாதத்தை முன் வைக்குமாறு கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. இந்த மாதிரியானோர் தான் பொதுமக்களுக்கு உதவுவதை தடுக்கும் பொருட்டு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களுக்கு குடிநீர் வழங்கினால் எதிர்ப்பர், ரயில்வே தண்டவாங்கள் கட்சினால் எதிர்ப்பர். பொது மக்களை கொடுமைப்படுத்தும் மாவோயிஸ்ட்கள், பயங்கர வாதிகளுக்காகவே இத்தகைய போராளிகளின் இதயம்துடிக்கும்.

இன்று இந்திய மக்கள் அனைவரும் ஜம்முகாஷ்மீர் மக்களுடன் இணைந்துள்ளனர். அதே இந்தியமக்கள் காஷ்மீரில் வளர்ச்சியை அதிகரிக்கவும் அமைதியை கொண்டுவரவும் எங்களுடன் துணைநிற்பர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் 2018-ஆம் ஆண்டு 35000 பஞ்சாயத்து தலைவர்கள் தேர்வாகினர். இந்ததேர்தலில் 74 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவின் போது வன்முறை, கலவரம் என்ற பெயரில் யாருடைய ரத்தமும் சொட்டவில்லை. இதெல்லாம் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியால் நடைபெற்றது. பிராந்தியத்தின் வளர்ச்சிக்காகவும் மனித மேம்பாட்டுக் காகவும் பஞ்சாயத்து யூனியன்கள் தற்போது மீண்டும் வந்துள்ளது திருப்தி அளிக்கிறது.

கிராமங்களுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில் 73 வது திருத்தமாக பஞ்சாயத்து ராஜ், 1992 ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்ததிருத்தம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது என்பது மிகவும் வேதனையை தருகிறது. இதுபோன்ற அநீதியை எப்படி பொருத்துக்கொள்வது? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் மக்களின் முன்னேற்றத்துக்காக பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் இருந்தன.

எனவே நான் காஷ்மீர் ஆளுநரிடம் கேட்டுக் கொள்வது என்னவன்றால் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்துவதற்கான பணிகளில் அவர் ஈடுபடவேண்டும். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் கிராமத்துக்கு திரும்புவோம் என்ற திட்டத்தை நடத்தியுள்ளோம். தூய்மைஇந்தியா திட்டம், கிராமப்புறங்களில் மின் இணைப்பு உள்ளிட்டவை அடிமட்டத்தில் உள்ளவர்களையும் சென்றடையும். இதுதான் உண்மையான ஜனநாயகம் .

காஷ்மீர் பிரிவினைக்குப்பிறகு முதல் முறையாக ஆங்கில செய்திசேனல் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டி

Comments are closed.