தெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார் :

அவர் பேசியதாவது மகாத்மா காந்தியினுடைய நினைவு தினத்தையொட்டி, அனைவரும் ஊழலை ஒழிக்க உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும். இதற்காகவே தெலுங்குதேசம் கட்சி சார்பாக இந்த போராட்டம்

நடத்தபடுகிறது. “ஊழலுக்கு எதிரான போர்’ என்கிற பெயரில் இந்த போராட்டம் நடத்தப்படும்.

இந்த போராட்டத்தை அனைத்து கிராமங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம். லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும். இந்த சட்டவரை முறைக்குள் பிரதமர் பதவியில் இருப்போரையும் கொண்டு வரவேண்டும். வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளியிடமுடியாது என்று , மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார் . இது, அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போல் இருக்கிறது. என்று பேசினார்

Leave a Reply