சென்னையில் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவர்களும், தொண்டர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட கமலாலய தரிசன விழா நேற்று குதுகலத்துடன் நடைபெற்றது

மாலை 3 மணிக்கெல்லாம் தொடங்கிய இந்த விழாவில் பா.ஜ.கவின் தலைவர்களும், தொண்டர்களும் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்கள்.

விழாவுக்கு வந்த அனைவரையும் பாரதிய ஜனதா .மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் , தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன்,மாநில அமைப்பு செயலாளர் மோகன் ராஜிலு போன்றோர் வாசலில்_நின்று வரவேற்றார்கள்.

இதில் அகில இந்திய செயலாளர் பி.முரளீதர்ராவ் , அமைப்பு இணை பொதுசெயலாளர் வி.சதீஷ் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந் கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு குங்குமம் , மஞ்சள், சட்டைதுணி ஆகியவையும், குழந்தைகளுக்கு பொம்மை, இனிப்பு போன்றவைகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சிற்றுண்டி பரிமாறபட்டது. கமலாலயத்தின் கலை அரங்கில் கிராமிய கலைஞர்களும், பரதநாட்டிய கலைஞர்களும் பங்குகொண்ட பல் சுவை கலைநிகழ்ச்சிகள் நடந்தன. குடும்பத்துடன் வந்திருந்த தொண்டர்கள் தலைவர்களிடம் ஆசிபெற்றார்கள்.

இந்தநிகழ்ச்சியில், காங்கிரஸ்சின், மத்திய சென்னை மாவட்ட பொதுசெயலர் ஜீவா தலைமையில், நூற்றுக்கும் அதிகமானோர் , அக்கட்சியிலிருந்து விலகி, பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.

Leave a Reply