காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் மற்றும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது,

நீரா ராடியாவுக்கு சொந்தமான அறக்கட்டளை நிகழ்ச்சியி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அத்வானி மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் பங்கேற்றதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது .

இதை கடுமையாக கண்டித்துள்ள பாரதிய ஜனதா கட்சி இந்த அபாண்டமான குற்ற சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

.

பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியது:

.

நீராராடியாவுக்கு சொந்தமான அறக்கட்டளை நிகழ்ச்சியில் அத்வானி பங்கேற்ரதாக கூறப்படுவது தவறான செய்தியாகும். அத்வானி மற்றும் நிதின் கட்கரி பங்கேற்ற நிகழ்ச்சி பெஜாவர்மடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த மடத்துக்கு தேவையான இடம் நரசிம்மராவ் பிரதமராக இருந்த-போது கொடுக்கப்பட்டது . பிறகு குஜராத்மாநில அரசு இதை வழங்கியது. முக்கிய பிரச்னைகலை திசை திருப்ப காங்கிரஸ் கட்சி வெகு காலமாகவே முயற்சி செய்து வருகிறது. இத்தகைய குற்ற சாட்டு கூறியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

BJP NDA rally video

Leave a Reply