காங்கிரஷ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காக எதையும் செய்ய வில்லை காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பாராளுமன்றத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவுகொடுத்து இணைந்திருக்கின்றன. இருப்பினும் அவர்கள் மக்களுக்காக எதையும் செய்ய வில்லை. எனவே, அவர்களால் நல்லாட்சியை வழங்கமுடியாது என்று திரிபுராவில் நடந்த தேர்தல் பிரச்சார

கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் பேசினார்:-

இது குறித்து மேலும் அவர் பெச்சியதவது ; வங்கதேச ஊடுருவல்காரர்கள் மேற்குவங்கம் மற்றும் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவில் நுழைந்து வருகின்றனர். ஆனால், அவர்களை கட்டுப்படுத்த காங்கிரசோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இருகட்சிகளும் பொதுமக்களின் பிரச்சினையில் தீவிரம் காட்டுவதில்லை. சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லாகடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், திரிபுராவில் அந்தவசதி இல்லை.

இதனால், இங்கு வளர்ச்சியில்லை. நல்லாட்சி அமையவும், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புகிடைக்கவும் பெண்களுக்கு உரியமரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைக்கவும் பாஜக.,வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்

Leave a Reply