உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டுமக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழுபொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றிபெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டுவருகிறது. வளர்ந்த நாடுகள்கூட கடுமையாக போராடி வருகிறது.

 

என்ன நடந்தாலும் வெளியே வராதீர்கள். இந்தியா ஒரு இக்கட்டில் இருக்கும்போது நமது செயல்கள் தான் இதைக் கையாளுவதற்கான நமது திறனை வெளிக்காட்டும்.இந்த சூழ்நிலையில், அயராது பணிபுரியும் பணியாளர்களுக்கு எந்தவிதத்தில் நன்றி சொல்வது..?

இபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீர்கள். வீட்டை விட்டு வெளியே வரவே வராதீர்கள்.நீங்கள் தினமும் சந்திக்கும் மனிதர்கள் கொரோனாவை பரப்புகிறவர்களாக இருக்கலாம்.அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வெளியே வரக்கூடாது. வளர்ச்சியை விட பாதுகாப்பு மிக மிக முக்கியம்.வெளியே வரவேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். உங்கள் வீடுகளைச் சுற்றி லட்சுமணன் கோடு வரைந்து கொள்ளுங்கள்.

1 லட்சம் பேருக்கு இந்த தொற்றுபரவ வெறும் 67 நாட்கள்தான் ஆகும். அடுத்த 11 நாட்களில் அடுத்த 1 லட்சம் , அடுத்த 4 நாட்களில் அடுத்த 1 லட்சம்பேருக்கு தொற்று ஏற்பட்டு விடும்.கற்பனை செய்து பாருங்கள். இந்தியா போன்ற ஒருநாட்டில் அப்படி நடக்கவே கூடாது. ஒருமுறை கொரோனா வந்து விட்டால் அதன் அறிகுறிகள் வெளிப்பட சில நாட்களாகும். அதற்குள் பலருக்கும் பரவியிருக்கும்.என்ன தீர்வு? என்ன மாற்று? நம்மிடம் என்ன ஏற்பாடுகள் இருக்கின்றன? என்பதுதான் இப்போது இருக்கும் கேள்வி

 

இன்று இரவு 12 மணிமுதல் இந்தியா முழுமையாக முடக்கப்படுகிறது. இந்தியர்கள் யாரும் வெளியே வரக்கூடாது*மாநிலந்தோறும் அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சமுகவிலகலைப் பின்பற்றினால் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள் அது தவறு.

உங்களுக்காக 24 மனி நேரமும் வேலை செய்யும் ஊடகவியலாளர்களை நினைத்துப் பாருங்கள்…

*உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* மத்திய,மாநில, சமூக நலத் தொண்டு நிறுவனங்களுக்கும் மோடி நன்றி.

 

Comments are closed.