தமிழகத்தில் தற்போது இருக்கும் 234 எம்எல்ஏக்களில் சுமார் 76 பேர்கள் வரை குற்ற பின்னணி உடையவர்கள் என்று தன்னார்வ அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வரும் ஒரு சில மாதங்களில் தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது இந்நிலையில் நியூ(நேஷனல்-எலெக்சன் வாட்ச்), மற்றும்

அசோசியேசன்ஸ்-பார் டெமாக் ரடிக் ரீபார்ம்ஸ் என்னும் தன்னார்வ-அமைப்புகள் இனைந்து தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் எம்எல்ஏக்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டது .

இதில் கிடைத்த விபரம் வருமாறு ;

தமிழகத்தில் 76 பேர் கட்சி வேறுபாடு இல்லாமல் குற்றப் பின்னணி உடையவர்களாக இருக்கின்றனர் .கேரளா_”69 ‘, மேற்கு வங்காளம் “45 “, அசாம் “7 “, புதுச்சேரியில் “6 “

அதே நேரத்தில் இந்திய அளவில் 30 சதவீதம் பேர் வரை குற்றப்பின்னணி உடையவர்களாக உள்ளனர். இவை அனைத்தும் அரசியலில் குற்றப்பின்னணி உடையவர்களின் வளர்ச்சியையே காட்டுகிறது

Leave a Reply