ஜியோஸ்பேஷியல் என்ற தொழில்நுட்பத்தின் வழியாக பாதிக்கபட்ட விவசாயநிலங்களை துல்லியமாக கணக்கிட்டு அதற்கு உண்டான இழப்பீடுகளைஉடனடியாக வழங்கும் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்தியஅரசு அறிமுகபடுத்தியுள்ளது.

இந்திய அரசுக்கு சொந்தமான வேளாண் காப்பீட்டு நிறுவனம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிர் காப்பீடு, வழங்கும் ஒரு புதிய பயிர் காப்பீட்டு திட்டம் (NCIS)-ஐ கொண்டுவந்துள்ளது.இதன்படி கோதுமை 1.5%, நெல் 2.5%, எண்ணெய் வித்துக்கள் 2%, இதர தானியங்களுக்கு 2-2.5% வரை அதிகபட்ச பிரீமியமாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

ஆனால் தற்போது விவசாயிகள், திருத்தப்பட்ட தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் (MNAIS) மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டம் (WBCIS) என்ற இரண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், திட்டத் தொகையின் மீது அதிகபட்சமாக 15% பிரீமியம் செலுத்தி வருகின்றனர்.

அதனால் விவசாய நிலத்தின் பரப்பளவு, விளைவிக்கப்படும் பயிர்கள், பயிர் விளைவித்தலின் போது ஏற்படும் இடர்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மோடி அரசாங்கம் விவசாயிகளின் உணவு பயிர்களுக்கு அதிகபட்ச பிரீமியமாக 2.5% காப்பீடு தொகை செலுத்தும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயி தன் வயலில் அறுவடை செய்து களத்தில் வைத்திருந்த பயிர், புயல் அல்லது மழை காரணமாக அழிய நேரிட்டால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பயிர் காப்பீட்டு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்பட்ட சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும்.
அதிக மழை அல்லது அதிக வறட்சி அல்லது பிற இயற்கை சீற்றங்களால் பயிர் சாகுபடி பாதித்து, மகசூல் பாதிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் என தெரிய வந்தால், 25 சதவீத காப்பீட்டுத் தொகை முதலில் வழங்கப்படும்.

பிறகு விவசாய நிலத்தின் பரப்பளவை மிகத்துல்லியமாக ஆளில்லா விமானங்கள் செயற்கைகோள்கள் மூலமாக கணித்து விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய நிலத்தின் பரப்பளவை துல்லியமாக கணித்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு எஞ்சிய நிவாரணத் தொகையை எளிதாக எவ்வித பிரச்சனையும் இன்றி வேகமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply