உலகளாவிய நாடுகளில் பரவியிருக்கும் பண்பாடுகளில் பாரதத்தின் நாகரிகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக தென்னிந்திய கலாச்சாரத் தாக்கத்தை இலங்கை, நேபாளம், மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மியான்மார் ஆகிய நாடுகளில் காணலாம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கி.பி. முதல் நூற்றாண்டு முதலே அமைந்த புராதனச் சின்னங்களும், தொன்மையான தென்னிந்திய கலாச்சாரச் சுவடுகளும் காணக் கிடைக்கின்றன. "வியட்நாம் டாணாங் நகரில் இருக்கும் சம்பா அருங்காட்சியகத்தில் தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் இருப்பதுபோல பிரம்மாண்ட சிவலிங்கம் உள்ளது.

பஞ்சகச்ச வேட்டியும், தலைப்பாகையும் அணிந்த சம்பா இனத்தமிழர்களின் அன்றைய தோற்றத்தைச் சித்தரிக்கும் உருவச் சிலைகளும் உள்ளன' என்று சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் சர்மா கூறினார்

Tags:

Leave a Reply