தத்தாத்திரேயர் சரித்திரம் ஜென்ம ஜென்மாந்திரங்களுக்கு முந்தைய காலம் அது. பிரபஞ்சத்தின் துவக்கமே இல்லாத காலம். புராணங்களின்படி உருவமற்று இருந்த பரமாத்மன் என்ற எதோ ஒரு சக்தி மட்டுமே இயங்கிக் கொண்டு இருந்த காலம் அது .பரமாத்மன் என்ற சக்தியே பராசக்தி எனப்படுபவள் என்றே சௌந்தர்யலஹரி, சக்தி புராணங்கள் போன்ற நூல்களில் இருந்து அறிகின்றோம். மூன்று தெய்வங்களான

பிரும்மா, விஷ்ணு , சிவன் மூவரையும் உள்ளடக்கி நின்றவள் அந்தபராசக்தி.

ஒரு முறை பரமாத்மன் என்ற அந்த உருவமற்ற சக்தி பதினான்கு உலகையும் படைக்க எண்ணி அதற்குத் தேவையானவர்களான பிரும்மா, விஷ்ணு, மகேஷ்வரர்களைப் முதலில் படைத்தாள். பிரபஞ்சத்தின் முதல் பகுதி துவங்கியது .படைக்கப்பட்ட அந்த மூவரில் படைக்கும் ஆற்றலைப் பெற்ற பிரும்மாவோ, சற்றும் தாமதிக்காமல் தான் தோற்றுவிக்கப்பட்ட உடனேயே பன்னிரண்டு உலகங்களையும்; அற்புதமான எண்ணற்ற ஜீவராசிகளையும்; படைக்கத் துவங்கினார். மனித குலம் உயிர் பெறத் துவங்கியது.

சிருஷ்டியை துவங்கிய பிரும்மாவோ அதன் ஆரம்பமாக ஏழு தேவரிஷி முனிவர்களான அங்கீரச, அத்ரி, வஷிஷ்டர், புலசா, புலத்தியா, மார்கசி, மற்றும் க்ராது என்பவர்களை படைத்தார். அப்படி படைக்கப்பட்ட பிரும்மாவின் மான சீகபுத்திரர்களில் அத்ரி முனிவர் இரண்டாமவர் ஆவார். அதைத் தொடர்ந்து பிரும்மாவின் உடலின் இருந்த அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு குணங்களைக் கொண்ட படைப்புக்கள் மெல்ல மெல்ல வெளிவரத் தோன்றிய வண்ணமே இருக்க, "முனிவர்களிலும் மேலான முனிவரான கர்த்த பிரஜா பதியும் பிரும்மாவின் ஒரு பக்கத்தில் இருந்து அவதரித்தார்".

இப்படியாக உலகம் தோன்றி சில காலம் உழன்றது. படைக்கப்பட்ட பலவுலகப் பிறவிகள்  பிரம்மாதங்கள் இஷ்டப்படி கட்டுக் கோப்பின்றி வாழத்துவங்கினர். தான்னhல் கஷ்டப்பட்டு படைக்கப்பட்ட பிறவிகள் கட்டுக்கோப்பின்றி வாழத் துவங்கினதினால் பல காலத்திற்குப் பிறகு உலக வாழ்கையினால் ஏற்பட இருந்த பின் விளைவுகளைப் பற்றி மனக் கண்ணால் கண்ட பிரம்மா கவலையுற்றார். வாழ்கையில் ஒழுக்கம் இன்றி உன்னதமான ஆன்மீக வாழ்கையை உருக்குலைத்த வண்ணம்; தான் தோன்றித்தனமாக பூவுலகப்பிறவிகள் வாழ்வதைக் கட்டுப்படுத்தி அவர்களை நல்ல நிலைக்கு வழி நடத்திச் செல்லும் ஒரு மார்கத்தைத் துவக்க எவரையாவது படைக்க வேண்டும் என்ற அவசியம் எழுந்து விட்டதை உணர்ந்தார்.

மனதில் நீண்ட நேரம் பல்வேறு நிலைமைகளையும் தீர ஆலோசித்தார். பிரகதியைப் படைத்த பொழுது அவர்களுடன் வெளி வந்திருந்த நியதிகளும் வேத மறைகளும் ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருந்தன. பூவுலகப் பிறவிகள் தான் தோன்றித்தனமாக வாழ்வதைக் கட்டுப்படுத்தி நல்ல நிலைக்கு அவர்களை வழி நடத்திச் செல்லும் மார்கத்தை காட்ட வேண்டும் எனில் ஆரம்பத்தில் அவர் படைத்திருந்த ஏழு தேவ ரிஷி முனிவர்களில் ஒருவரான அத்ரி முனிவருக்குப் பிறக்கும் பிள்ளையினால் மட்டுமே அதை செய்ய முடியும் என்பதே அந்த உண்மை. என்ன செய்யலாம் என நிதானமாக பல்வேறு பிரச்சனைகளையும்; ஆராய்ந்து யோசித்துப் பார்த்த பொழுது அவருக்குக் புரிந்தது அந்த உண்மை

தொடரும்,,,,,

நன்றி சாந்திப்பிரியா 

படைத்தல் தொழிலுக்கு அதிபதியாகக், பிரம்மா கோவில், பிரம்மா படைத்தல், பிரும்மா விஷ்ணு சிவன் மூவரையும்

Leave a Reply