அத்ரிமுனிவர்  அத்ரி முனிவர் திருமணமாகாதவர். நியதிகளின் விதிப்படி அத்ரிமுனிவர் மற்றும் அவருடைய மனைவிக்கு ஒரு உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும். அப்படி பிறக்கும் மகன் மூலமே உருக்குலைத்த வண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆன்மீக வாழ்கையை சீர்படுத்த முடியும். அதை அவர் மூலம்; பிறக்கும் பிள்ளையினால் மட்டுமே செய்ய முடியும் என்று இருந்ததினால் திருமணமே ஆகாத அத்ரி முனிவர் மூலம் அந்த செயலை எப்படி செய்வது என்பது ஒரு பிரச்சனையாக இருந்தது.

அதற்கு முன்னோடியாக திருமணமாகாத "அத்ரிமுனிவரிடம்" சென்று திருமணம் செய்து கொள்ள அவரைசம்மதிக்க வைக்க வேண்டும்.அதற்கான காரணங்களை அவரிடம் விளக்கமாகக் கூற வேண்டும். இல்லை எனில் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுவார். ஆகவே அவருக்கு எப்படித் திருமணத்தை நடத்தி வைப்பது , யாரை மனைவியாக அமைப்பது, இதற்கு என்ன செய்யலாம் என யோசனை செய்த பொழுது நல்ல வழி தெரிந்தது.

முனிவர்களைப் படைத்த பொழுது பிரம்மாவினால் படைக்கப் பட்டு இருந்த ஒரு மாமுனிவர்; "கர்த்த பிரஜா பதி" என்பவர் ஆவார். கர்த்த பிரஜா பதி பிறந்த பல காலத்திற்கு பின்னர் பிரம்மாவின் பேத்தியையே திருமணம் புரிந்து கொண்டு அவள் மூலம் ஒன்பது பெண்களைப் பெற்று எடுத்து இருந்தார். கர்த்த பிரஜா பதிக்குப் பிறந்திருந்த அந்த ஒன்பது பெண்களில் அதி உத்தமமானவளும் நற்குணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்து இருந்தவள் அனுசூயா என்ற ஒரு பெண். அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்து அத்ரி முனிவருக்கு அவளையே திருமணம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் மூலம் ஒரு பிள்ளையை பிறக்க வைத்து அந்தப் பிள்ளை மூலம் உருக்குலைத்த வண்ணம் மனிதர்கள் தொடர்ந்து கொண்டிருந்த வாழ்கையை கட்டுப்படுத்தி , அவர்களை நல் வழியில் கொண்டு செனறு உலகில் ஆன்மீக வாழ்கையை சிறப்பாக அமையவைக்கலாம் என்று நம்பி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலானார்.

அதற்கேற்றபடி அரங்கேறி நடந்த பல் வேறு நிகழ்சிகளினால் அத்ரிமுனிவர் கர்த்த பிரஜா பதிக்குப் பிறந்திருந்த அனுசூயாவை மணந்து கொண்டார். ஆனால் விதிப்பயனாக அதிலும் பிரும்மா நினைத்தபடி நிகழ்சிகள் நடேந்தேரவில்லை திருமணம் ஆகி பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்தத் தம்பதியினருக்கு எந்த ஒரு மழலை செல்வமும் கிடைக்கவில்லை. மனதில் வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்தனர். இன்னமும் தனக்கு ஒரு மழலை செல்வம் கிடைக்கவில்லையே என்று வருத்தமுற்ற அத்ரி முனிவர் தனக்கு ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒற்றைக் காலில் நின்றபடி பல வருடங்கள் கடுமையான தவத்தில் இருக்கலானார்.

ஒற்றைக் காலில் நின்றபடி பல வருடங்கள் கடுமையான தவத்தில் இருந்த அவருடைய வைராக்கியததைக் கண்டு தேவர்கள் திகைத்து நின்றனர். அதுவே தக்க தருணம் என அத்ரி முனிவர்  அனுசூயா பிரும்மh நினைத்தார். மூன்று தனித் தெய்வங்களாக பிரும்மா, விஷ்ணு, சிவன் என்று தனித் தன்மைகளுடன் தாங்கள் படைக்கப் பட்டிருந்தாலும், தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால், கடுமையான தவத்தில் ஆழ்ந்து இருக்கும் அத்ரி முனிவரின் தவத்தை மெச்சும் வகையில் அவர் முன் மும்மூர்த்திகளாகச் சென்று காட்சி தரவேண்டும். அப்பொழுது தனக்கு ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என்று வேண்டியபடித் தவமிருக்கும் அத்ரி முனிவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் விரும்பும் வளமான மழலைச் செல்வத்தை அளிக்க வேண்டும் அப்படிச் செய்வதின் மூலமே பிரச்சனைக்கு ஒரு வழி பிறக்கும்.

பிரும்மா நினைத்தபடியே அடுத்தடுத்து நிகழ்சிகள் நடை பெறலாயின. அத்ரி முனிவரின் தவத்தினை மெச்சி அவருக்கு மும்மூர்த்திகளும் காட்சி தந்தனர். விரைவிலேயே அவருக்கு தாங்கள் அம்சமாகவே ஒரு பிள்ளை தோன்றுவார் என்று ஆசி கூறிச் விட்டுச் சென்றனர் என்றாலும் உண்மையில் மும்மூர்த்திகளில் பகவான் விஷ்ணுவே பின்னர் அந்தப் பிள்ளையாக பிறக்க இருந்தார். அதற்க்கு ஒரு பின்னணிக் காரணம் இருந்தது. மும் மூர்த்திகளும் தாங்கள் அம்சமாகவே ஒரு பிள்ளை அவர்களுக்கு பிறப்பார் என்று ஆசி கூறிச் விட்டுச் சென்றதினால் அத்ரி முனிவர்-அனுசுயா தம்பதியினர் அடைந்த மகிழ்சிக்கு எல்iலயே இல்லை. அந்த அத்ரி முனிவரும் அனுசூயாவும் எப்படிப்பட்ட தம்பதியினர் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். கற்பின்சின்னம் அனுசூயா. தவ வலிமையின் சின்னம் அத்ரி முனிவர். நன்குசீவி முடித்ததலை, கழுத்தில் ருத்திராட்ச மாலைகள், ஒரு கையில் கமண்டலம், இன்னொரு கையில் ஒரு தண்டம்(கழி) இதுவே அத்ரி முனிவர் வைத்து இருந்தவை.

அத்ரிமுனிவரின் பெருமைகள்

அத்ரி முனிவரின் பெருமை எப்படிப்பட்டது தெரியுமா? ஒருமுறை வசிஷ்டருக்கும், விஸ்வாமித்திர முனிவருக்கும் தீராத அளவுக்குப் பகை உண்டாயிற்று. அந்த சமயத்தில் வஷிஷ்ட முனிவர் இருந்த நாட்டை ஆண்டு வந்த கல்மசபாதா என்ற மன்னன் ஒருநாள் காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது அங்கு வஷிஷ்டரின் மகனைக் கண்டான். மன்னன் கல்மசபாதாவிற்கு வஷிஷ்டரின் மகன் யார் என்று தெரியாததினால், காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது அங்கு இருந்த வஷிஷ்டரின் மகனைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான். அதனால் தன்னை மரியாதைக் குறைவாக நடத்தி விட்டான் என்று வஷிஷ்டரின் மகனகளில் ஒருவரான சக்தி என்பவர் தவறாக எண்ணிக் கொண்டு கல்மாசபாதாவை ஒரு இராக்ஷசன் ஆகும்படி சாபமிட்டு விட்டார்.

அந்த சாபத்தினால் இராக்ஷசனாக மாறினான் கல்மபாதா. இராக்ஷசனாக மாறிய கல்மசபாதாவோ தெரியாமல் செய்த தன் தவறுக்கு இப்படி ஒரு தண்டனையை வஷிஷ்டரின் மகன் சக்தி தந்துவிட்டாரே என மனம் புழுங்கி; அதற்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினான். வஷிஷ்டரின் பரம எதிரி போலசெயல்பட்டுக் கொண்டு இருந்த விஸ்வாமித்திர முனிவரிடம் சென்று தனக்கு உதவு மாறு வேண்டி நின்றான் . வஷிஷ்டருக்கு அப்படி ஒரு நிலைமை வராதா என்று எதிர் பார்த்துக் காத்திருந்த விஸ்வாமித்திர முனிவரும் உடனடியாக தன் முழு ஆதரவையும் கல்மபாதாவுக்குத் தர அதைப் பெற்றுக் கொண்டவன் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் வஷிஷ்டரின் அனைத்து மகன்களையும் பிடித்து கொன்று விழுங்கினான். மகன்கள் அனைவரையும் இழந்து நின்ற வஷிஷ்டர், மனம் துடித்துப் போய் வருத்தத்தில் ஆழ்ந்து, செய்வதறியாது அதற்கு ஒரு வழி தேடியவண்ணம் தவத்தில் அமர்ந்துவிட்டார்.

அந்த சமயத்தில் தான் வஷிஷ்டரின் மகன் சக்தியின் மனைவி கர்பமுற்று இருந்தாள்.கணவனைப் பறிகொடுத்த வருத்தத்தில் இருந்த அவளுக்கு சில மாதங்களுக்குப் பின்னர் ஒரு மகன் பிறந்தான். பிறந்த மகன் வளர்ந்து

பெரியவன் ஆனான். மெல்ல மெல்ல நடந்த முடிந்திருந்த அனைத்து நிகழ்சிகளையும் பற்றி அறிந்து கொண்டான். மனதில் கோபம் துளிர் விட்டது, அது கோபக் கனலாய் மாறியது. தன்னுடைய குடும்பத்திற்கு கல்மாசபாதா என்ற இராக்ஷசனால் ஏற்பட்ட கொடுமைக்கு பழி தீர்க்க முடிவு செய்து அனைத்து இராக்ஷசர்களையும் கூண்டோடு அழிக்க எண்ணி பெரிய யாகம் செய்யத் துவங்கினான். அந்த யாகம் வளரத் துவங்கி வெற்றி பெற்றால், வஷிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திர முனிவர்களுக்கு இடையிலான பகை இன்னமும் அதிகரிக்கும்;.அது உலகிற்கு நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொண்ட அத்ரி முனிவர், யாகம் நடந்து கொண்டிருந்த இடத்திற்குப் போய்; அந்த யாகத்தின் பலனால்; ஏற்படக் கூடிய பின் விளைவுகளைப் பற்றி வஷிஷ்டரின் பேரனிடம் விரிவாக எடுத்துக் கூறி அவன் மனதைத் தேற்றிய பின்னர் அவர் நடத்திக் கொண்டு இருந்த யாகத்தை தடுத்து நிறுத்தினார். அதன் விளைவாக வஷிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திர முனிவர்களுக்கு இடையே வளர இருந்த பகை குறையலாயிற்று.

அத்ரி முனிவரின் சக்திக்கு மற்றும் ஒரு சம்பவம். ஒருமுறை அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் கடுமையான போர் மூண்டதில் இரு பக்கத்தில் இருந்தும் பறந்து வந்த அம்புகளும், ஆயுதங்களும் தொடர்ந்து மழை பெய்வது போல வானில் பறந்து விழுந்த வண்ணம் இருக்க, அம்பு மழைகள் சூரிய-சந்திர ஒளிகளையே முழுவதுமாக மறைத்துக் கொண்டு நின்றன. அதனால் தேவர்கள் அந்த இருட்டில் யுத்தம் செய்ய முடியாமல் தடுமாறத் துவங்கினர். பயந்து போன தேவர்கள் அத்ரி முனிவரின் துணையை நாடி ஓட, இருட்டில் தடுமாறத் துவங்கிய தேவர்களைக் காப்பாற்ற தன் தவவலிமையினை உபயோகித்து அத்ரி முனிவர் தானே சூரிய-சந்திரனாக உதித்து ஒளிகொடுத்து யுத்தத்தில் தேவர்களுக்கு உதவி அவர்களைக் காத்தார்.

அத்ரி முனிவர் அப்படிப்பட்ட குணம் உடையவர் என்றாள் அவருடைய மனைவி அனுசூயா மட்டும் சளைத்தவராகவா இருப்பார்; ? மார்கண்டைய புராணத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் கதையை படித்தால் அவளுடைய பெருமைப்புரியும்

Thanks சாந்திப்பிரியா    

தொடரும்…..

மும்மூர்த்திகள் , மும்மூர்த்திகளான மும்மூர்த்திகள் ளுள்

Leave a Reply