டெல்லியில் மூன்று மாநகராட்சிகளுக்கான வாக்குஎண்ணிக்கை தற்போது நடை பெற்று வருகிறது. மூன்று மாநகராட்சிகளிலும் பா ஜ க முன்னிலை வகித்து வருகிறது.

டெல்லி மாநகராட்சி தெற்குடெல்லி மாநகராட்சி, கிழக்குடெல்லி மாநகராட்சி, வடக்குடெல்லி மாநகராட்சி என்று மூன்றாக பிரிக்கப்பட்டது.

மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டபிறகு முதல் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தொடரச்சியாக இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தெற்குடெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 104வார்டுகளில் 43ல் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது . காங்கிரஸ் 30இடங்களில்மட்டுமே முன்னிலை வகிக்கிறது . சமாஜ்வாதி போன்ற இதர கட்சிகள் 31இடங்களில் முன்னிலையில் வகிக்கின்றன .

கிழக்குடெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 64 வார்டுகளில் 35 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது . காங்கிரஸ் 19 இடங்களில் மட்டும் தான் முன்னிலையில் உள்ளது.

வடக்குடெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 104 வார்டுகளில் 60 இடங்களில் பாஜகவும் 26இடங்களில் காங்கிரஸும் முன்னணியில் உள்ளன

இத்தனைக்கும் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசின் ஆட்சியே , எதிர்கட்சியான பாஜக வென்றுள்ளது நகர்ப்பகுதி மக்கள் காங்கிரசின் பிராடுதனத்தை, போலி சிறுபான்மை ஆதரவு அரசியலை புரிந்துகொண்டு விட்டனர். தெற்குடெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர் , அந்த பகுதிகளிலும் பா ஜ க வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply