டில்லியில் இந்த ஆண்டு  மட்டும் இதுவரை 635 கற்பழிப்பு வழக்குகள் பதிவு டில்லியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 635 கற்பழிப்புவழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ஒருவழக்கில் மட்டும் குற்றவாளி என்று தண்டனை கிடைத்திருப்பதாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவல் மூலம் தெரிய வருகிறது.

2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 கற்பழிப்பு வழக்குகளிலும் 754 பேர் கைது செய்ய பட்டுள்ளனர். 403 பேர் நீதிமன்ற இறுதி விசாரணையின கீழ் இருந்துவருகின்றனர். 348 பேரின் மீது ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருகிறது .

கடந்த 5 வருட புள்ளி விவரங்களை பார்க்கும்போது சரா சரியாக 10 சதவிதம் குற்றம் அதிகரித்து வந்துள்ளதை காட்டுகிறது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply