உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி ஆட்சிநடக்கிறது. இதற்கு முன்பு மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆட்சி நடைபெற்றது. கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி,  பகுஜன் சமாஜை ஓரங்கட்டி பாஜ அமோக வெற்றிபெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இங்கு சட்டமன்ற தேர்தல் வருகிறது. மக்களவை தேர்தலில் பெற்ற  வெற்றியை சட்டமன்ற தேர்தலில் பெற வேண்டும் என லட்சியத்துடன் பாஜ செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில்  பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடியும் பாஜவை பின்னுக்கு தள்ளின. மக்கள் செல்வாக்கு  இல்லாதவர்களை தேர்தலில்நிறுத்தியதே பஞ்சாயத்து தேர்தல் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உ.பி.மாநிலம் மீரட்டில் பாஜ நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம்  உள்ளவர்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் உறுப்பினராக இருக்கவேண்டும் என்றும், அவர்களது பக்கங்களை குறைந்தது 25 ஆயிரம்பேர் லைக்  செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைதெரிவித்தார். இது பாஜவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநில தலைவர் லக்‌ஷ்மி காந்த  பாஜ்பாயக்கு டுவிட்டர் கணக்கு இருக்கிறது. ஆனால் அவரதுபக்கத்தை 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பின்தொடர்கிறார்கள். முசாபர்நகர் எம்எல்ஏ சுரேஷ்  ரானாவுக்கு 13 ஆயிரம்பேர் ஆதரவு உள்ளது.அமித்ஷாவின் நிபந்தனையை சுமையாக கருதக்கூடாது. இளைஞர்களுடன் தொடர்பு கொள்ள இணையதளங்கள் தான்  சிறப்பான வழி என சுரேஷ் ரானா தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply