தகர்ந்து வரும் அமெரிக்க பாகிஸ்தான் உறவு கடந்த வாரம் எம்.ஜே. அக்பர் அவர்கள் இந்த மாத முதலில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட "டின்டர் பாக்ஸ்" என்ற தன்னுடைய நூலின் அமெரிக்கப் பதிப்பை எனக்கு வழங்கினார்.

ஜனவரி 2011 ல் புது டெல்லியில் இந்தப் புத்தக வெளியீட்டுக்குப் பிறகு, இது மிகச்சிறந்த புத்தகம் என நான் விளக்கியிருந்தேன். "பாகிஸ்தானின் கடந்த காலம் மற்றும் எதிர்காலம்" என துணைத் தலைப்பிடப்பட்ட இந்தப் புத்தகம் 14 அத்தியாயங்களைக்

கொண்டுள்ளது. "டார்க் சைட் ஆஃப் தி மூன்" என்று தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாம் அமெரிக்கப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை உள்ள யு.எஸ் பாகிஸ்தான் உறவு மீது இந்த அத்தியாயம் கவனம் செலுத்துகிறது.

இதுவரையில் யு.எஸ் – பாகிஸ்தான் உறவுகளைப் பொருத்தவரை, சமீப ஆண்டுகளில் நடந்ததிலேயே, 9/11 தாக்குதலின் முதன்மை குற்றவாளியான ஒசாமா பின்லேடனை யு.எஸ் நேவி சீல்கள் அபோட்டாபாத்தில் கண்டுபிடித்ததே முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அவன் முழுமையாக பத்தாண்டு காலமாக வாஷிங்டனின் அனைத்து துப்பறியும் ஆற்றலுக்கும் சவாலாகவே இருந்து தப்பி வந்திருக்கிறான்.
 பின்லேடன்
கூடுதல் அத்தியாயம் இயல்பாகவே 1896ல் உயிர் நீத்த ஜெனரல் ஜேம்ஸ் அப்போட் அவர்களை குறிப்பிட்டே தொடங்குகிறது, அவர் பெயரே அபோட்டாபாத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உச்சரிப்பாகத் தோன்றுவதற்காக ஒரு எழுத்தை நீக்கிவிட்டு இந்தப் பகுதியின் தற்போதைய உச்சரிப்பு அப்டாபாத் என இருக்கிறது என்று எம்.ஜே குறிப்பிடுகிறார்.

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி வழங்குவதற்கு யு.எஸ் இயல்பாக முன்வரும் வகையில் வாஷிங்டன் உடனான உறவை சுமூகமாக வைப்பதற்காக, ஜின்னா மற்றும் லியாகத் அலிகான் போன்ற அவருடன் இருந்தவர்கள் செய்த கவனமான முன்னேற்பாடுகள் பற்றி அக்பரின் புத்தகம் விவரமாக பதிவுசெய்கிறது. பாகிஸ்தான் உருவானதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்கப் பத்திரிக்கையாளர் மார்க்ரெட் போர்கே-வொய்ட் பின்வருமாறு ஜின்னாவிடம் கேட்கிறார், "அமெரிக்காவிடமிருந்து தொழில்நுட்ப உதவி அல்லது நிதியுதவியை எதிர்பார்க்கிறீர்களா?", ஜின்னாவின் பதில் வெளிப்படையாக இருந்தது, "பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தேவைப்படுவதைவிட அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தேவைப்படுகிறது, பாகிஸ்தான் உலகின் மைய அச்சு ஏனென்றால் உலகின் எதிர்கால மையமாகக் கொண்டுள்ள பகுதியில் நாங்கள் இருக்கிறோம்" என அவர் பதிலளித்தார்.

 ஜின்னாமார்க்ரெட்டிடம் ஜின்னா குனிந்து குரலைத் தாழ்த்தி, ரகசியமான முறையில் கூறுகிறார். ரஷ்யா வெகு தூரத்தில் இல்லை.' "உருவாகவிருக்கும் மறைமுகப் போரின் எல்லைக் கோடுகள் பற்றிய (ஜின்னாவின்) முழுமையான புரிதலை" இந்தப் புத்தகத்தின்படியான இந்த உரையாடல் சுட்டிக்காட்டுகிறது.

பின்லேடன் விவகாரம் தொடர்பாக, பின்லேடன் மறைந்து வாழ்வதற்கான இடத்தை அளித்ததில் பாகிஸ்தான் அரசு மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவற்று முழுமையான பங்கு இருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தின் அமெரிக்கப் பதிப்பு தெளிவாக கூறுகிறது.

9/11 தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தேடத்தொடங்கிவிட்டது. அக்பர் பின்வருமாறு எழுதுகிறார்: 1998 ல் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான அல்கொய்தா தாக்குதலுக்குப் பிறகு பின்லேடனைப் பிடிப்பதற்கு பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா மூலம் அமெரிக்கா நெருக்கடி அளிக்கத் தொடங்கியது.

"ஒசாமா பின்லேடன் 2011ல் இறப்பதற்கு முன் பத்தாண்டுகாலம் எங்கு எப்படி தப்பிப் பிழைத்திருந்தான் என்பது பற்றி பலவிதமான கருத்துக்கள் இருக்கும், ஆனால் ஒன்று தெளிவான விஷயம்: அபோட்டாபாத்துக்கு வந்துசேரும் முன்னர் ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வாழந்துவந்தான். ஐஎஸ்ஐக்கு இது தெரியும், ஆனால் அது இந்தத் தகவலை வெளியிடாமல் மறைத்துவிட்டது."

லஷ்கரின் அறிவிக்கப்பட்ட எட்டு நோக்கங்கள் மற்றும் எல்ஈடிக்கு ஐஎஸ்ஐ யின் முழு ஆதரவு மற்றும் நவம்பர் 2008 ல் மும்பாய் மீதான தாக்குதல் ஆகியவை பற்றி இந்த அத்தியாயத்தில் அதிக இடத்தைப் பிடித்துள்ளது. அக்பர் பின்வருமாறு எழுதுகிறார்:

"அறிவிக்கப்பட்ட எட்டு நோக்கங்களை லஷ்கர் கொண்டிருந்தது, அவற்றில்: முஸ்லிம்களுக்குத் தொந்தரவளிப்பதைத் தடுத்தல், எந்த ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டாலும் பழிவாங்குதல், முஸ்லிம் நாடுகளைப் பாதுகாத்தல், முஸ்லிம் நாடுகளை மீண்டும் கைப்பற்றுதல், மேலும் விநோதமாக முஸ்லிம்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம் அல்லாதோர் மீது ஜிஸ்யா அல்லது தனிமனித வரி விதிப்பு ஆகியவை. ஆஃப்கானிஸ்தானில் அவர்கள் சாதித்தவற்றை காஷ்மீரிலும் அடைவதற்கு லஷ்கர் மற்றும் அதே போன்ற கருத்து கொண்ட மற்றவர்களையும் பயன்படுத்த நினைக்கும் ஐஎஸ்ஐக்கு இது ஏற்றதாக இருந்தது. பலம் பொருந்திய சோவியத் ராணுவத்துக்கு எதிரில் இந்திய ராணுவம் சாதாரணமானது என்று நம்பப்பட்டது.

"காஷ்மீரில் ஐஎஸ்ஐயின் நோக்கங்களுக்கு இணக்கமாக லஷ்கர் இருக்கும் என்ற நம்பிக்கையில் அதற்கு அதிக முதலீடுகளை செய்யத் தொடங்கியது. லஷ்கரைப் பொருத்தவரை காஷ்மீர் இரண்டு நாடுகளிடையிலான இடத்துக்கான மற்றொரு போரல்ல, இது தீர்க்கதரிசி முகம்மது காலத்திலிருந்து உருவ வழிபாடு செய்பவர்களுக்கும் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்களுக்கும் இடையிலான வீரஞ்செறிந்த போராட்டம். குறிப்பாக ஹிந்துக்களைக் கொள்ளும் வீரத்தியாகிகளுக்கு பரிசாக பேரின்பமுள்ள விண்ணுலகம் இருக்கும். இதற்கும் மேல் காஷ்மீரை பெற்றுவிட்டால், அது இந்தியாவை மீண்டும் வெற்றியடைவதற்கான அடிப்படையாக இருக்கும்."

இன்னும் அக்பர் கூறுகிறார்:

"ஹெட்லி மீது சிகாகோவில் அமெரிக்கா வழக்கு தொடர்ந்ததற்கு அவன் இந்தியாவினால் தேடப்படும் குற்றாவாளி என்பது காரணமல்ல. லஷ்கர் இந்தியாவுக்கு எவ்வளவு எதிரியோ அதே அளவு அமெரிக்காவுக்கும் எதிரி. ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் போரிலேயே, பாகிஸ்தானில்   எம்.ஜே. அக்பர் அரசில் உள்ளவர்களின் இரட்டை வேடத்தை அமெரிக்கா புரிந்துகொண்டுவிட்டது, ஆனால் அதனுடைய செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்காகவும் பாகிஸ்தானுடனான கூட்டணியின் தேவைப்பாடு காரணமாகவும் அது நெருக்கடிக்குள்ளானது. வாஷிங்டனில் மட்டுமல்ல அமெரிக்கத் தெருக்களிலும் முழுமையான அதிர்ச்சி மற்றும் துரோகத்தை உணர்வதற்கு அபோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்பட்ட மோசமான நிகழ்ச்சி தேவைப்பட்டது."

"யாருக்கு என்ன தெரியும், எப்போது தெரியும் என்பது பற்றிப் பல கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத் இரண்டுக்குமிடையே ஜெரோனிமா(பின்லேடன் மீது நடத்திய வேட்டைக்கு ஆபரேஷன் ஜெரோனிமா என்று பெயர்) பற்றிய நம்பகமின்மை முழுமையானது என நம்புவதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன", என எம்.ஜே. கூறுகிறார்.

டின்டர்பாக்ஸ் இன் சமீபத்திய பதிப்பில் சேர்க்கப்பட்ட இந்த புதிய அத்தியாயம், அபோட்டாபாத்தில் மே ஒன்று அதிரடி நடவடிக்கை பற்றி வாசகர்களுக்கு பலவித விவரங்களை அளிக்கிறது, மேலும் முன்பு யு.எஸ் மற்றும் பாகிஸ்தான் இடையே இருந்துகொண்டிருந்த நம்பிக்கை தற்போது தகர்ந்திருக்கிறது என்ற அக்பரின் முடிவை அது முழுவதுமாக உறுதிப்படுத்துகிறது, என்று நான் கருதுகிறேன்.

கொசுறு

நம்பினால் நம்புங்கள், கனடா பத்திரிக்கையின்படி ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்கு உதவியவர் பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஷக்கீல் அஃப்ரிதி.

டாக்டர் அஃப்ரிதி மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் 33 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வாஷிங்டன் மற்றும் பாகிஸ்தானுக்குமிடையிலான நம்பிக்கை மேலும் நோருங்குங்க காரணமாகியுள்ளது .

ரிபப்ளிகன் செனட்டர் ஜான் மெக்கெய்ன் மற்றும் டெமாக்ரடிக் செனட்டர் கார்ல் லெவின் இணைந்து வெளியிட்ட அறிக்கை: "பின்லேடனைக் கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காக்கு உதவிய டாக்டர் அஃப்ரிதிக்கு 33 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சிகரமான மிகக் கொடுமையான செயல். அஃப்ரிதி செய்தது தைரியமான, வீரம் செறிந்த மற்றும் தேசப்பற்று மிக்க செயல், இது உலகில் அதிகமாகத் தேடப்பட்ட தீவிரவாதியும், பெரும் எண்ணிக்கையில் கொலை புரிந்தவனும் மற்றும் பல அப்பாவி பாகிஸ்தானியர்களைக் ரத்தக்கறையை தனது கைகளில் கொண்டவனுமான ஒருவனை கண்டறிவதற்கு உதவியது."

அஃப்ரிதியை "மன்னித்து உடனடியாக விடுவிக்க வேண்டும்" என மெக்கெய்னும் லெவினும் கோரியிருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார் யு.எஸ். வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட்.

நன்றி எல். கே. அத்வானி

புது டெல்லி

Leave a Reply