வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் தி.மு.க இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்;

வரும் 9ம் தேதி திருநெல்வேலியில் நான் பேசுவதாக இருந்த நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகலாம் என்பதன காரணமாக அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸார் கூறுகின்றனர் , தி.மு.கவும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி ஏற்படலாம் என்ற பயத்தில் இருக்கின்றனர் . அதன் காரணமாகவே நான் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply